சகல துறையிலும் பிரகாசித்த முதித லக்‌ஷான்: டி.எஸ். எதிர் நாலந்த போட்டி சமநிலையில் முடிவு

352
SINGER U19 DIV I

19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் டிவிஷன் – I கிரிக்கெட் தொடரில், இன்றைய நாள் மூன்று போட்டிகள் நிறைவுற்றன. குறித்த போட்டிகளில் புனித செபஸ்தியன் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்த அதே வேளை, மொறட்டு வித்தியாலயம் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்திய போதிலும் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய எதிர் புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டு துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய புனித செபஸ்தியன் கல்லூரி இன்றைய நாள் தர்மபால கல்லூரியை இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

189 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததிருந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று தமது முதல் இன்னிங்சை தொடர்ந்த புனித செபஸ்தியன் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 66 ஓவர்களுக்கு 274 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய துலாஜ் சனில்க்க மற்றும் மலிந்த பீரிஸ் அரை சதம் கடந்தனர். தர்மபால கல்லூரி சார்பாக தில்ஷான் டி சில்வா மற்றும் சமிந்து சுமனசிங்க தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து இன்னிங்ஸ் தோல்வியினை தவிர்ப்பதற்காக 143 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் களமிறங்கிய தர்மபால கல்லூரி 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் தோல்வியுற்றது. அஷேர் வர்ணகுலசூரிய மற்றும் வினுஜ ரணசிங்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (முதல் இன்னிங்க்ஸ்) : 131 (47) – கிம்ஹான் குணசிங்க 30, தஷிக் பெரேரா 3/10, தருஷ பெர்னாண்டோ 3/29

புனித செபஸ்தியன் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்) : 274 (66) – துலாஜ் சனில்க்க 64, மலிந்த பீரிஸ் 57, தஷிக் பெரேரா 34, தில்ஷான் டி சில்வா 2/53, சமிந்து சுமனசிங்க 2/32

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (இரண்டாம் இன்னிங்ஸ்) : 137 (59.2) – அஷேர் வர்ணகுலசூரிய 3/19, வினுஜ ரணசிங்க 3/25

முடிவு: புனித செபஸ்தியன் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றி


டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரி முதல் இன்னிங்சில் 47 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்து கொண்டது. எனினும் இரண்டாவது இன்னிங்சுக்காக 285 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நாலந்த கல்லூரி 45 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தமையால், போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

31 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 57.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்தியது. முதல் இன்னிங்சுக்காக 22 ஓட்டங்களை பெற்றிருந்த முதித லக்‌ஷான் இரண்டாவது இன்னிங்சில் 77 ஓட்டங்களை விளாசினார். அத்துடன் தசுன் திமேஷ 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் நாலந்த கல்லூரி சார்பாக கலன பெரேரா, மலிங்க அமரசிங்க மற்றும் உமேஷ்க டில்ஷான் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்சுக்காக கசுன் சந்தருவன் 29 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்த போதும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்றனர். சிறப்பாக பந்து வீசிய விஹான் குணசேகர 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 163 (44.2) – விஹான் குணசேகர 25, டொரின் பிட்டிகல 25, முதித லக்க்ஷான் 22, மெத்சித் ஜயமன்ன  21*, கலன பெரேரா 3/47, மதுஷான் ஹசரங்க 2/31, லக்ஷித ரசங்கன 2/28, உமேஷ்க தில்ஷான் 2/19

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 116 (28) – அவிஷ்க பெரேரா 26, லக்ஷித ரசங்கன 27, முதித்த லக்க்ஷான் 7/30, தத்சார பண்டார 2/39

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 238/9 (57.4) – முதித்த லக்க்ஷான் 77, தசுன் திமேஷ 57, டொரின் பிட்டிகல 37, மெத்சித் ஜயமன்ன 21, கலன பெரேரா 2/32, மலிங்கா அமரசிங்க 2/45, உமேஷ்க தில்ஷான் 2/51

நாலந்த கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 138/6 (45) – கசுன் சந்தருவன் 29, சுகன்க விஜேவர்தன 21, முதித லக்க்ஷான் 2/49, விஹான் குணசேகர 4/39

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவுற்றது.


சாஹிரா கல்லூரி எதிர் மொரட்டு வித்தியாலயம்

மொறட்டு வித்தியாலயம் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் துரதிர்ஷ்டமாக அவ்வணிக்கு வெற்றி பெற முடியவில்லை. முதல் இன்னிங்சுக்காக சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்த அவ்வணி 104.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ஓட்டங்களை பெற்றிருந்த பொழுது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

சிறப்பாக துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுசங்க அணி சார்பாக 178 ஓட்டங்களை விளாசினார், அத்துடன் ஷெஹத சொய்சா 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் முஹம்மது மஹ்தி 107 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய சாஹிரா கல்லூரி அணி 76 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தபோது அதிர்ஷ்டவசமாக இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுற்றது. சிறப்பாக பந்து வீசிய ரஷான் பெர்னாண்டோ 37 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

சாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 136 (47.5) – முஹம்மது ஷக்கி 32, முஹம்மது ரமீஸ் 29, சஜித் சமீர 27, ரஷான் பெர்னாண்டோ 5/28

மொறட்டு வித்தியாலயம் (முதல் இன்னிங்க்ஸ்): 335/8d (104.4) – நிஷான் மதுசங்க 178, ஷெஹத சொய்சா 74, முஹம்மது ரிபாத் 2/28, முஹம்மது மஹ்தி 3/107

சாஹிரா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 76/8 (44) – சஜித் சமீர 29, ரஷான் பெர்னாண்டோ 6/37

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவுற்றது. மொறட்டு வித்தியாலயம் முதல் இன்னிங்ஸ் வெற்றி.