அரைச் சதங்கள் மூன்றுடன் ஆதிக்கம் செலுத்திய மலியதேவ கல்லூரி

210

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவு – 1 பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இரண்டு நாட்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் தொடரில் இன்று (16) ஒரு போட்டி நிறைவுக்கு வந்தது.

இதில் தேவபதிராஜ கல்லூரிக்கு எதிராக பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் முன்னிலை பெற்ற மலியதேவ கல்லூரி அணி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் ஆட்டத்தை கைப்பற்றியது.

இலங்கைக்கு எதிராக இந்திய கட்புலனற்றோர் அணிக்கு மற்றொரு வெற்றி

இந்திய கட்புலனற்றோர் கிரிக்கெட்…

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தேவபதிராஜ கல்லூரி அணி, பவன் சந்தேஷின் அரைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  

பந்துவீச்சில் ஒசத ஜயவிக்ரம 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், கவீன் பண்டார 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி அணி, 260 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவ்வணிக்காக முதித்த பிரேமதாஸ 71 ஓட்டங்களையும், சாலுக்க அத்தபத்து 66 ஓட்டங்களையும், சுபுன் சுமணரத்ன 50 ஓட்டங்களையும் பெற்று வலுச் சேர்த்தனர்.

பந்துவீச்சில் தேவபதிராஜ கல்லூரியின் கல்ப சேத்திய, ஜீவக ஷசீன் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

134 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தேவபதிராஜ அணியினர், 124 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவ்வணிக்காக சுதீர வீரரத்ன ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, மலியதேவ கல்லூரியின் விதத் படெபொல 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

தேவபதிராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 126/10 (47.5) – பவன் சந்தேஷ் 60, ஒசந்த ஜயவிக்ரம 3/12, கவீன் பண்டார 2/23

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 260/6 d (54.4) – முதித்த பிரேமதாஸ 71, சாலுக்க அத்தபத்து 66, சுபுன் சுமனரத்ன 50, கவீன் பண்டார 31, கல்ப சேத்திய 2/20, ஜீவக ஷசீன் 2/43

தேவபதிராஜ கல்லூரி (இர்ணடாவது இன்னிங்ஸ்) 124/4 (39) – சுதீர வீரரத்ன 53*, ஜீவக ஷசீன் 27, விதத் படபொல 2/02

முடிவு – முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<