இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி

147

சிங்கர் நிறுவனம் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையே நடாத்தும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில், மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி, புதுக்குளம் மகாவித்தியாலத்திற்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 205 ஓட்டங்களால் அபார வெற்றியினை பதிவு செய்துள்ளது.

மன்னார் சித்திவிநாயகர் கல்லூரி மற்றும் புதுக்குளம் மகாவித்தியாலய அணிகள் மோதிய இந்தப் போட்டி புதுக்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் நேற்று (10) ஆரம்பமானது.

குணதிலக்கவின் விக்கெட்டை கைப்பற்றி டி20 அரங்கில் சாதனை படைத்த ஜஸ்பிரிட் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான…..

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தெரிவு செய்து கொண்டது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணிக்காக  அனோஜன் சதம் விளாசினார். இதேநேரம், கதுசன் அரைச்சதம் பெற்றுக் கொடுத்தார். 

இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியோடு மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணி 47 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 302 ஓட்டங்களைப் பெற்றது.

மன்னார் சித்திவிநாயகர் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக சதம் பெற்ற அனோஜன் 107 ஓட்டங்கள் குவிக்க, கதுசன் 70 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதேநேரம் புதுக்குளம் மகாவித்தியாலய அணியின் பந்துவீச்சு சார்பில் லதுஜன் 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க, சானுஜன் 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை முன்னெடுத்த புதுக்குளம் மகாவித்தியாலய அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்துடன் வெறும் 37 ஓட்டங்களை பெற்று தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

புதுக்குளம் மகாவித்தியாலய அணியின் துடுப்பாட்டம் சார்பில் தேவிகன் பெற்ற 9 ஓட்டங்களே அவரது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாக அமைந்தது.

இதேநேரம், மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக ருக்ஷாந்த் மற்றும் கிதுர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதால் பலோவ் ஒன் (follow on) முறையில் மீண்டும் துடுப்பாடிய புதுக்குளம் மகாவித்தியாலய அணி இம்முறை 24 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 61 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் இன்னிங்ஸ்  தோல்வி அடைந்தது.

பரபரப்பான போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்….

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் இம்முறை அனோஜன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், லிவான்சன் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<