சிங்கர் அனுசரணையில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகள் இன்று (30) நிறைவடைந்தன. இந்த மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
புனித ஆன்ஸ் கல்லூரி, குருநாகல் எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை
ஜனிஷ்க பெரேரா (143), துனித் ஜயதுங்க (141) ஆகியோரின் சதங்கள் மூலம் புனித செபஸ்டியன் கல்லூரி இமாலய ஓட்டங்களை பெற்றபோதும் புனித ஆன்ஸ் கல்லூரியுடனான போட்டியை அந்த அணி சமநிலையில் முடித்தது.
மழையினால் கைவிடப்பட்ட இளையோர் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி
புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித ஆன்ஸ் கல்லூரி அணி 203 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த புனித செபஸ்டியன் கல்லூரிய எஞ்சிய நேரம் முழுவதும் துடுப்பெடுத்தாடி 7 விக்கெட்டுகளை இழந்து 505 ஓட்டங்களை பெற்றது.
போட்டியின் சுருக்கம்
புனித ஆன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 203 (90.3) – லசித் வர்ணகுலசூரிய 50, கவிந்து ஏக்கநாயக்க 29, முயிஸ் ரபீல் 20, பிரவீன் குரே 4/24, டாஷிக் பெரேரா 2/21
புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 505/7 (98) – ஜனிஷ்க பெரேரா 143, துனித் ஜயதுங்க 141, பிரவீன் குரே 62*, ருமேஷ் மெண்டிஸ் 41, நுவனிந்து பெர்னாண்டோ 39, சுகித்த பிரசன்ன 27, நிஷித்த அபிலாஷ் 26, பசிந்து தென்னகோன் 3/101
முடிவு – வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது
குருகுல கல்லூரி, களனி எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு
கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடிய நிலையில் இரண்டு நாட்கள் கொண்ட ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. ஆட்டநேரம் முடியும் போது போட்டியில் வெற்றிபெற இசிபதன கல்லூரி 59 ஓட்டங்களை பெறவேண்டி இருந்ததோடு குருகுல கல்லூரி 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டி இருந்தது.
எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதற்காக இசிபதன கல்லூரிக்கு அதற்கான புள்ளிகள் கிடைத்தன.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய குருகுல கல்லூரி 94 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் இசிபதன கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களை எடுத்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக துடுப்பாடிய குருகுல கல்லூரி 249 ஓட்டங்களை பெற்று இசிபதன கல்லூரிக்கு வெற்றி இலக்காக 159 ஓட்டங்களை நிர்ணயித்தது.
பயிற்சிப் போட்டியில் அதிசிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி
இன்று கடைசி நாள் ஆட்ட நேரம் முடியும் போது இரண்டாவது இன்னிசில் துடுப்பாடிய இசிபதன கல்லூரி 100 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
போட்டியின் சுருக்கம்
குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 94 (26.1) – லிக்ஷான் சசங்க 26, ரஷ்மிக்க மேவன் 22, ரவிந்து ரத்னாயக்க 5/29, லிசுர வினத் 2/21, தினத் திசானாயக்க 2/22
இசிபதன கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 185 (32.3) – தெவிந்து திக்வெல்ல 59, மதுஷிக்க சந்தருவன் 33*, ரவிந்து ரத்னாயக்க 25, ரிஷித்த சங்கல்ப 5/11, நுவன்த மதுஷான் 2/48, சசித்த அஷான் 2/59
குருகுல கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 249 (94.5) – கெமிரா நயனதரு 80, நுவன் சானக்க 74, லிக்ஷான் சசங்க 27, திலிப் சாமர 22, ரவிந்து ரத்னாயக்க 4/38, தினத் திசானாயக்க 3/19, மதுஷிக சந்தருவன் 2/51
இசிபதன கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 100/5 (18) – கவிந்து திக்வெல்ல 32, லேஷான் அமரசிங்க 31, லிக்ஷான் சசங்க 2/28
முடிவு – வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது
மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை எதிர் தர்மராஜா கல்லூரி, கண்டி
கண்டி தர்மராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளை இழந்தபோதும் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
மொரட்டு மஹா வித்தியாலயம் முதலில் துடுப்பெடுத்தாடி 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தர்மராஜா கல்லூரி 159 ஓட்டங்களுக்கே சுருண்டது. பந்துவீச்சில் எரான் ஹன்சமால் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
போட்டியின் சுருக்கம்
மொரட்டு மஹா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 141 (49.4) – விராஜ் கவிஷ்க 33, நதித் மிஷென்திர 21, யசித்த சமரரத்ன 4/41, நவிந்த டில்ஷான் 3/27, விராஜித்த அஹலபொல 2/33
தர்மராஜா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 159 (52.4) – துலாஜ் பண்டார 40, கசுன் குணவர்தன 38, விராஜித் அஹலபொல 29*, எரான் ஹன்சமால் 5/32, விஷ்வ திதுலன 2/44, நதித் மிஷேந்திர 2/44
மொரட்டு மஹா வித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 120/4 (28.3) – நிஷான் மதுஷ்க 74, மதுஷங்க டிலக்ஷன 25*, விராஜித் அஹலபொல 3/29
முடிவு – வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க