19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண போட்டிகளுக்கான, இரண்டு காலிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. தர்ஸ்டன் கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய துசால் மதுஷங்க 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தர்மசோக்க கல்லூரியை 186 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினார்.
ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு
மக்கோன, சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினம் (16) ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்குகிடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நீர்கொழும்பு, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில் முதலில் களமிறங்கிய ஆனந்த கல்லூரி, 60.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை பதிவு செய்தது.
சிறப்பாக துடுப்பாடிய வலது கை துடுப்பாட்ட வீரர் காமேஷ் நிர்மல் பெறுமதி மிக்க 60 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாக பதிவு செய்தார். அதேநேரம் அணி சார்பாக 58 ஓட்டங்களால் பங்களிப்பு செய்த சம்மு அஷான் திருப்தியடையக் கூடிய ஓட்ட எண்ணிக்கைக்கு ஆனந்த கல்லூரியை வழி நடத்தினார்.
அதேநேரம் சிறப்பாக பந்து வீசிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் நான்கு பிரதான பந்து வீச்சாளர்கள் தங்களுக்கிடையே தலா இரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்ட அதேநேரம், வலிமை மிக்க ஆனந்த் கல்லூரியை 236 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.
அதனையடுத்து, வெற்றியீட்டும் வேட்கையுடன் களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதலாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 131 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது, சிறப்பாக துடுப்பாடிய ரொஷென் பெர்ணான்டோ 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த நிலையிலும் கெவின் பெரேரா ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்கிறார்.
நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 236 (60.2) – காமேஷ் நிர்மல் 60, சம்மு அஷான் 58, கவிந்து கிம்ஹான் 45, லஹிரு ஹிரண்ய 28, லசித் க்ரூஸ்ள்ளே 2/30, பசிந்து கொலோம்பகே 2/33, பசிந்து உசெத்தி 2/34, திமிந்து ப்ரீத்தம 2/48
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 131/3 (34) – கெவின் பெரேரா 40*, ரொஷென் பெர்ணான்டோ 40, லசித் க்ரூஸ்ள்ளே 38
தர்மசோக்க கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு
கதிரான கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய தினம் (16) ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தர்மசோக்க கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தமையினால், 76.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை பதிவு செய்தது.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கசுன் மதுரங்க 78 ஓட்டங்களை அதிக பட்ச ஓட்டங்களாக பதிவு செய்த அதேநேரம், அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். தர்ஸ்டன் கல்லூரி சார்பாக அதிரடியாக பந்து வீசிய துசால் மதுஷங்க 58 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தர்மசோக்க கல்லூரியை துவம்சம் செய்தார்.
அதனையடுத்து களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது விக்கெட் இழப்பின்றி 21 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
தர்மசோக்க கல்லூரி, அம்பலாங்கொடை (முதல் இன்னிங்ஸ்): 186 (76.2) – கசுன் மதுரங்க 78, தினுக்க தில்ஷான் 28, உமேஷ் இமந்த 22, துசால் மதுஷங்க 6/58, சந்துரு டயஸ் 3/42
தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 21/0 (4.4)