சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் I முதல் சுற்றுக்காக இன்றைய தினம் நிறைவுற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில், குருகுல கல்லூரி, அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தை இன்னிங்ஸ் மற்றும் 28 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டிகொண்டது. அதே நேரம் மற்றைய போட்டி போதிய நேரமின்மை காரணமாக போட்டி சமநிலையில் முடிவுற்றாலும், அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரி முதல் இன்னிங்சில் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தர்மசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர்புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி – இரண்டாம் நாள்

இவ்விரு கல்லூரிகளும் C குழுவில் முதல் சுற்றுக்காக மோதிக்கொண்ட இந்த போட்டியில் முதலாவது நாளான நேற்று முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய தர்மசோக கல்லூரியை நிம்சார அதரகல்ல மற்றும் மனுஜ பெரேரா ஆகியோரின் நேர்த்தியான பந்து வீச்சில் 61 ஓவர்களுக்குள் 209 ஓட்டங்களுக்கு வீழ்த்தினர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவீஷ் குமார 60 ஓட்டங்களையும், கசுன் மதுரங்க 58 ஓட்டங்களையும் பெற்றதோடு ஓட்ட எண்ணிகையை 209 ஓட்டங்களுக்கு உயர்த்தினர், புனித சில்வெஸ்டர் கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய நிம்சார அதரகல்ல மற்றும் மனுஜ பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 82 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்த நிலையில், இன்று ஆட்டத்தை தொடர்ந்த புனித சில்வெஸ்டர் கல்லூரி தினுக்க டில்ஷான் மற்றும் யொஹான் டி சொய்சா ஆகியோரின் அதிரடி பந்து வீச்சில் 186 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 23 ஓட்டங்களால் பின்னிலையுற்றது.

புனித சில்வெஸ்டர் கல்லூரி சார்பாக இறுதிவரை போராடிய சசிக்க விராஜ் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். அதே நேரம் நேர்த்தியாக பந்து வீசிய தினுக்க டில்ஷான் மற்றும் யொஹான் டி சொய்சா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தர்மசோக கல்லூரி முதல் இன்னிங்சில் 23 ஓட்டங்களால் வெற்றிபெற வழி வகுத்தனர்.

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய தர்மசோக கல்லூரி, கசுன் மதுரங்கவின் (79) சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம்  சகல விக்கெட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்ட நேரம் நிறைவு பெற்றது.

போட்டியின் சுருக்கம்

தர்மசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதல் இன்னிங்ஸ்): 209 (61) – கவீஷ் குமார 60, கசுன் மதுரங்க 58, தினுக தில்ஷான் 26, நிம்சார அதரகல்ல 3/38, மனுஜ பெரேரா 3/18, உசிந்து நிஸ்ஸங்க 2/17

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 186 (76) – சசிக்க விராஜ் 57*, அபிஷேக் இசுரங்க 24, மஞ்சித் ராஜபக்ஷ 23, தினுக தில்ஷான் 3/06, யொஹான் டி சொய்சா 3/13, உஷான் இமந்த 2/40

தர்மசோக கல்லூரி, அம்பலாங்கொடை (இரண்டாம் இன்னிங்ஸ்): 229 (56.4) – கசுன் மதுரங்க 73, தினுக தில்ஷான் 29, லொஹான் டி சொய்சா 22, உஷான் இமந்த 22*, உசிந்து நிஸ்ஸங்க 4/40

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. தர்மசோக கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி


அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம் எதிர் குருகுல கல்லூரி, களனி  – இரண்டாம் நாள்

இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த போட்டியில், ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய களனி, குருகுல கல்லூரி உதார ரவிந்து மற்றும் தேஷான் மலிந்த ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 28 ஓட்டங்களால் இலகுவாக அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தை வெற்றியீட்டியது.

209 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த குருகுல கல்லூரி, உதார ரவிந்துவின் 96 ஓட்டங்களின் உதவியுடன் தமது முதலாவது இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு 103 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. அதே நேரம், தேஷான் மலிந்த 52 ஓட்டங்களை பெற்று அணியுன் ஓட்ட எண்ணிகையை உயர்த்த பங்களிப்பு செய்தார். ரவிந்த பிரபாஷ்வர 92 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த் தினார்.

அதன் பின்னர், தமது இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தை பிரவீன் நிமேஷ் மற்றும் மலிந்து நிதுரங்க தமது அதிரடி பந்து வீச்சினால் 75 ஓட்டங்களுக்கு வீழ்த்தி வெற்றிக்கு பங்களிப்பு செய்தனர். அவ்வணி சார்பாக ரவிந்த பிரபாஷ்வர மட்டுமே 15 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார், ஏனையோர் ஒற்றை இலக்கத்தோடு ஆட்டமிழந்து சென்றனர்.

சிறப்பாக பந்து வீசிய மலிந்து நிதுரங்க 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் மற்றும் பிரவீன் நிமேஷ் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்): 169 (49.2) – எச் சச்சின் 69, தனஞ்சய ஷம்மிக 28, பிரவீண் நிமேஷ் 3/44, ப்ருத்திவி ருசர 4/38

குருகுல கல்லூரி, களனி (முதல் இன்னிங்ஸ்): 272 (64.4) – உதார ரவிந்து 96, தேஷான் மலிந்த 52, ப்ருத்திவி ருசர 28, கெமிர நயனதரு 24, ரவிந்த பிரபாஷ்வர 4/92, சித்தும் நிலுமிந்த 3/61, மதுரங்க ஸ்ரீ சந்திரரத்ன 2/88

அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம் (இரண்டாம் இன்னிங்ஸ்): 75 (29) – ரவிந்த பிரபாஷ்வர 15, பிரவீண் நிமேஷ் 3/21, மலிந்து நிதுரங்க 3/15, ப்ருத்திவி ருசர 2/07

முடிவு: குருகுல கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 28 ஓட்டங்களால் வெற்றி.