சிங்கர் டிவிஷன் I முதல் சுற்றுப்போட்டிகளுக்காக இன்றைய தினம் ஒரு போட்டி ஆரம்பித்த நிலையிலும், இரண்டாவது நாளாக நடைபெற்ற நான்கு போட்டிகள் நிறைவுற்றன.
புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி
மலியதேவ கல்லூரிமைதானத்தில், D குழுவில் முதல் சுற்றுப் போட்டிகளுக்காக மோதிக்கொண்ட இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய ஜோசப் வாஸ் கல்லூரி மதுஷான் ரணதுங்கவின் சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஜோசப் வாஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்த சஞ்சீவ பிரியதர்ஷன மற்றும் தமித் சில்வா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர்.
அதனை தொடர்ந்த சொந்த மண்ணில் களமிறங்கிய மலியதேவ கல்லூரி, இன்றைய நாள் ஆட்ட முடிவின் போது சிறப்பாக துடுப்பாடி இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 108 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் இருக்கிறது.
போட்டியின் சுருக்கம் :
புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ (முதல் இன்னிங்ஸ்): 205 (63.1) – மதுஷான் ரணதுங்க 100, யொஹான் பீரிஸ் 30, சஞ்ஜீவ பிரியதர்ஷன 3/46, தமித சில்வா 3/42, கலன இலங்கக்கோன் 2/10
மலியதேவ கல்லூரி, குருநாகல (முதல் இன்னிங்ஸ்): 108 / 2 (31)
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லுரி, கொழும்பு
D குழுவில் முதல் சுற்றுக்காக மோதிக்கொண்ட இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்ற போதும் முதல் இன்னிங்ஸ் வெற்றியை நீர்கொழும்பு, மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி பதிவு செய்துகொண்டது. அதே நேரம், தமது சொந்த மைதானத்தில், தர்ஸ்டன் கல்லூரி 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 83 ஓட்டங்களால் முதல் இன்னிங்சில் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.
255 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரியை, பசிந்து உஷெத்தி தனது அதிரடி பந்து வீச்சின் மூலம் 47 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 172 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தி முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கு வழிவகுத்தார்.
எனினும், அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நவீன் குணவர்தனவின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 42.2 ஓவர்களில் 118 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் அதிரடி காட்டிய நவீன் குணவர்தன 41 ஓட்டங்குக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய தர்ஸ்டன் கல்லூரி, 10 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
போட்டியின் சுருக்கம் :
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 255 (67.1) – அஷான் பெர்னாண்டோ 91, சசிந்து கொலம்பகே 82, சரண நாணயக்கார 3/48, நவீன் குணவர்தன 3/80, குசல் ஆதித்ய 3/37
தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 172 (58) – ஜெயவிஹன் மாவிதன 33, இமேஷ் விரங்க 32, சரண நாணயக்கார 25, பசிந்து உஷெத்தி 6/47
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 118 (42.2) – ரவிந்து பெர்னாண்டோ 26, நவீன் குணவர்தன 6/41
தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்): 45/2 (10)
முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. மாரிஸ் ஸ்டெல்ல கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் மகாநாம கல்லூரி, கொழும்பு
கொழும்பு, ப்ளும்பீல்ட் மைதானத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல் இன்னிக்சுக்காக பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி பெற்றுக்கொண்ட 296 ஓட்டங்களுக்கு பதிலாக தமது முதலாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிய கொழும்பு, மஹாநாம கல்லூரி நிதுக வெளிகல மற்றும் ஹெஷான் ஹெட்டியாராச்சியின் அரை சதங்களுடன் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ஓட்டங்களை பெற்று 12 ஓட்டங்களால் முதல் இன்னிங்சில் முன்னிலைபெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்சுக்காக துடுப்பாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அவிந்து பெர்னாண்டோ அரை சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றிருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுற்று, போட்டி சமநிலையில் முடிவுற்றது.
போட்டியின் சுருக்கம் :
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 296 (75.4) – சந்துன் பெர்னாண்டோ 86, அவிந்து பெர்னாண்டோ 87, திலான் நிமேஷ் 41, விஹன் முதலிகே 3/38, நிதுக வெலிகல 2/42, ஹெஷான் ஹெட்டியாராச்சி 2/42
மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 308/7d (94,4) – நிதுக்க வெலிகல 79, பவன் ரத்நாயக்க 46, பிஷான் மென்டிஸ் 39, ஹேஷான் ஹெட்டியாராச்சி 51*, கவிந்து முனசிங்க 21, திலான் நிமேஷ் 3/97
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (இரண்டாம் இன்னிங்ஸ்): 162/5 (26) – அவிந்து பெர்னாண்டோ 56, சந்துன் பெர்னாண்டோ 47, சனோஜ் தர்ஷிக 21, ஹஷான் சந்தீப 4/52
முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. மஹாநாம கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி
இசிபதன கல்லூரி எதிர் வித்தியார்த்த கல்லூரி
பேராதனை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கண்டி வித்தியார்த்த கல்லூரியை 110 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் வீழ்த்தி இசிபதன கல்லூரி பாரிய முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து கொண்டது.
குறித்த போட்டியில் முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடியிருந்த இசிபதன கல்லூரி, அயன சிறிவர்தனவின் 134 ஓட்டங்களுடன் ஆட்டம் நிறுத்தப்படும் பொழுது 329 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதன் பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய வித்தியார்த்த கல்லூரி 110 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த்து. பந்து வீச்சில் இசிபதன கல்லூரி சார்பாக லெசுற வீனத் மற்றும் ஹேஷான் பெர்னாண்டோ ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி குறைந்த ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர்.
இரண்டாவது இன்னிங்க்சுக்காக களமிறங்கிய இசிபதன கல்லூரி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்றைய நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
போட்டியின் சுருக்கம் :
இசிபதன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 329 / 9d (77) – அயன சிறிவர்த்தன 134, கலன பெரேரா 42, லேஷான் அமரசிங்க 68*, இசுறு பிரபோத 2/46, நிபுன குமாரசிறி 2/59
வித்தியார்த்த கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்): 110 (39.3) – புலின குணதிலக்க 24, லெசுற வீனத் 3/26, ஹேஷான் பெர்னாண்டோ 3/13, லஹிரு டில்ஹான் 2/13
இசிபதன கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்): 194/8 (53) – ஹேஷான் பெர்னாண்டோ 58, கலன பெரேரா 39, நிபுன குமாரசிறி 3/56, கசுன் கருணாதிலக 2/62
முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.
ரிச்மண்ட் கல்லூரி எதிர் தர்மபால கல்லூரி
A குழுவில், முதல் சுற்றுக்காக மோதிக்கொண்ட இந்தப் போட்டியில் சந்துன் மென்டிசின் அதிரடி பந்து வீச்சின் மூலம் காலி, ரிச்மண்ட் கல்லூரி 130 ஓட்டங்களால் பாரிய வெற்றியிட்டியது.
முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை பதிவு செய்திருந்தாலும், பன்னிபிட்டிய, தர்மபால கல்லூரியை சகலதுறை ஆட்டக்காரர் தனஞ்சய லக்ஷான் மற்றும் சந்துன் மென்டிஸ் ஆகியோரின் அதிரடி பந்து வீச்சின் மூலம் 70 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி, முதல் இன்னிங்சில் 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து துடுப்பாடிய அவ்வணி, இரண்டாவது இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்று 235 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்தி தர்மபால கல்லூரியை துடுப்பாடுமாறு பணித்தது. இரண்டாம் இன்னிங்சுக்காக சிறப்பாக துடுப்பாடிய தனஞ்சய லக்ஷான் அரைச்சதம் கடந்து 71 ஓட்டங்களை பெற்று அணியை முன்னிலைப் படுத்தினார்.
235 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தர்மபால கல்லூரி, சந்துன் மென்டிஸ்சின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 32.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
போட்டியின் சுருக்கம் :
ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 120 (37.2) – தனஞ்சய லக்ஷான் 28, தவீஷ அபிஷேக் 26, தில்ஷான் டி சில்வா 4/16, மகிம வீரகோன் 4/38
தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (முதல் இன்னிங்ஸ்): 70 (34.4) – தனஞ்சய லக்ஷான் 3/15, சந்துன் மெண்டிஸ் 3/19, கவிஷ்க விஜேசிறி 3/34
ரிச்மண்ட் கல்லூரி, காலி (இரண்டாம் இன்னிங்ஸ்): 185/6d (41) – தனஞ்சய லக்ஷான் 71, தவீஷ அபிஷேகம் 46, சமிந்து சமரசிங்க 3/56
தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (இரண்டாம் இன்னிங்ஸ்): 105 (32.3) – அமில தயனக்க 23, சந்துன் மெண்டிஸ் 7/32
முடிவு: ரிச்மண்ட் கல்லூரி 130 ஓட்டங்களால் வெற்றி.