பத்தும் நிஸ்ஸங்கவின் சதத்தின் உதவியுடன் இசிபதன கல்லூரி வலுவான நிலையில்

696
pathum

19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் போட்டிகளுக்காக இன்றைய தினம் ஐந்து போட்டிகள் ஆரம்பமாகின. அந்த வகையில், பத்தும் நிஸ்ஸங்க மற்றும் ஆட்டமிழக்காமல் ரவிந்து ரசங்க பெற்றுக்கொண்ட அதிரடி சதங்களின் மூலம் இசிபதன கல்லூரி வலுவான நிலையிலும் மற்றும் தர்மசோக கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றியீட்டிய நிலையில் உள்ளன.

மஹாநாம கல்லூரி, கொழும்பு எதிர் மஹிந்த கல்லூரி, காலி

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி முதல் நாளாக காலி மஹிந்த கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அந்த வகையில் களமிறங்கிய மஹாநாம கல்லூரி முதல் இன்னிங்சுக்காக தேஷான் ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்ட அரைச் சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதே நேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்திய கெவின் கெமித 34 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய மஹிந்த கல்லூரி 113 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 65 ஓட்டங்களால் பின்னிலையுற்று இருக்கிறது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 178 (47.3) – தேஷான் ஹெட்டியாராச்சி 51, மலிந்து மதுரங்க 28, கவிந்து முனசிங்க 21, கெவின் கெமித 3/34, நிபுன் மலிங்க 2/36, பசிந்து தேஷான் 2/12

மஹிந்த கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்): 113/5 (45) – ரவிந்து ஹன்சிக்க 39, வினுர ஹிரஞ்சித் 28, பத்தும் பொத்தேஜூ 2/16


புனித மரியார் கல்லூரி, கேகாலை எதிர் தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய

பன்னிப்பிட்டிய, தர்மபால கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், முதலில் துடுப்பாடிய புனித மரியார் கல்லூரி, சஜீவ ரஞ்சித் பெற்றுக்கொண்ட 56 ஓட்டங்களின் பங்களிப்புடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதே நேரம் சிறப்பாக பந்து வீசிய மஹிம வீரக்கோன் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய தர்மபால கல்லூரி 38 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டினை இழந்த நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவுற்றது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

புனித மரியார் கல்லூரி, கேகாலை (முதல் இன்னிங்ஸ்): 177 (63.2) – சஜீவ ரஞ்சித் 56, சுஜித் குமார 24, மஹிம வீரக்கோன் 4/48, கலிந்து சமரசிங்க 2/35, தில்ஷான் டி சில்வா 2/31

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (முதல் இன்னிங்ஸ்): 38/1 (15)


தர்மசோக கல்லூரி, அம்பலங்கொடை எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு

முதல் சுற்றுக்காக C குழுவில் இடம்பெற்றிருந்த இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி கரன்தேனிய மைதானத்தில் முதல் நாளாக இன்று ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்மசோக கல்லூரி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது

அந்த வகையில் முதல் இன்னின்சுக்காக களமிறங்கிய டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய முதித்த லக்ஷான் 50 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார். அதே நேரம் ஓட்டங்களை மட்டுப்படுத்திய லொஹான் டி சொய்சா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

அதனை தொடர்ந்து களமிறங்கிய தர்மசோக கல்லூரி, ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட ரவிந்து ரஷங்கவின் அதிரடி சதத்தின் உதவியுடன் 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 190 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

டி எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 184 (47.2) – ஷெஷாட் அமீன் 37, மெத்சித் ஜயமன்ன 30, முதித்த லக்ஷான் 50, லொஹான் டி சொய்சா 3/33, கவிந்து அதீஷன் 3/41, உஷான் இமான்த 2/40

தர்மசோக கல்லூரி, அம்பலங்கொடை (முதல் இன்னிங்ஸ்): 190/3 (43) – ரவிந்து ரஷங்க 107*, கசுன் மதுரங்க 40, ஹர்சஜித் ரொஷான் 21


இசிபதன கல்லூரி, கொழும்பு எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி மொரட்டுவ, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்தது. முதலில் துடுப்பாடிய இசிபதன கல்லூரி பத்தும் நிஸ்ஸங்கவின் அதிரடி 135 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 305 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதேநேரம் சிறப்பாக பந்து வீசிய கௌமல் நாணயக்கார 110 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

பின்னர் முதல் இன்னின்சுக்காக களமிறங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 243 ஓட்டங்களால் பின்னிலையுற்று காணப்படுகிறது.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்

போட்டியின் சுருக்கம்:

இசிபதன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 305 (74.5) – பத்தும்  நிஸ்ஸங்க 135, கழன பெரேரா 41, ஹர்ஷ ரத்னாயக்க 28, ஹேஷான்  பெர்னாண்டோ 27, மலீஷ ரூபசிங்க 27, அயன சிறிவர்தன 23, கௌமல் நாணயக்கார 5/110, திலான் நிமேஷ் 4/85

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்): 62/2 (18) – பிரின்ஸ் பெர்னாண்டோ 37, லஹிரு தில்ஷான் 2/05


புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

கொழும்பு ஆனந்த கல்லூரி மைதானதில் இன்று ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித பெனடிக்ட் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. திணித்த பஸ்நாயக்க 38 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

அதனையடுத்து துடுப்பாடிய ஆனந்த கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்களை பெற்றுள்ளது. அசெல் சிகெரா ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார். சிறப்பாக பந்து வீசிய கவீஷ ஜயதிலக்க 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்:

புனித பெனடிக்ட் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 149 (60.2) – திணித்த பஸ்நாயக்க 38, மகீஷ் தீக்ஷன 33, சம்மு அஷான் 2/14, அசெல் சிகெரா 2/18, சுபுன் வாரகொட 2/22, திலீப ஜயலத் 2/43

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 156/7 (34) – சஹன் சூரவீர 59, அசெல் சிகெரா 30*, சம்மு அஷான் 28, சலன சங்கல்ப 2/29, கவீஷ ஜயதிலக்க 4/42