றோயல் கல்லூரி, பாணதுறை எதிர் மொறட்டு வித்தியாலயம்
மொறட்டு வித்தியாலய கல்லூரி மைதானத்தில், இரண்டாவது நாளாக நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ண முதல் சுற்று கிரிக்கெட் போட்டியில், எரான் ஹன்சமாலின் அதிரடி பந்து வீச்சின் மூலம் பாணதுறை, றோயல் கல்லூரி மூன்று ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
முதல் இன்னிங்சில் பாணதுறை றோயல் கல்லூரி பெற்றுக்கொண்ட 154 ஓட்டங்களுக்கு பதிலாக தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய மொறட்டு வித்தியாலயம் நிஷான் மதுசங்கவின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட 103 ஓட்டங்களின் மூலம் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்களை பெற்று 48 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.
அதேநேரம் மொறட்டு வித்தியாலய அணியின் ஓட்டங்களை மட்டுப்படுத்தியிருந்த எரான் ஹன்சாமல், 78 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதையடுத்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய றோயல் கல்லூரி சார்பாக, நிலான் பெர்னாண்டோ 71 ஓட்டங்களை குவித்த போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமையால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அந்த வகையில், மிகவும் இலகுவான 86 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மொறட்டு வித்தியாலயம் எதிர்பாராத வகையில், எரான் ஹன்சமால் மற்றும் பானுற பிரசஞ்சித்தின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு 27.2 ஓவ்ரகளுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரமே பெற்று மூன்று ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
றோயல் கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய எரான் ஹன்சமால் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் பானுற பிரசஞ்சித் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி போட்டியின் போக்கை முற்றாக மாற்றி பாணதுறை, றோயல் கல்லூரியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
போட்டியின் சுருக்கம்
றோயல் கல்லூரி, பாணதுறை (முதல் இன்னிங்ஸ்): 154 (65.4) – நிலான் பெர்னாண்டோ 61, பிரஷான் சில்வா 31, ஷெஹான் ஜீவந்த 5/25, ரஷான் கவிஷ்க 4/43
மொறட்டு வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்): 202/8d (58) – நிஷான் மதுஷங்க 103, நதித் மிஷேந்திர 40, மதுஷான் பெர்னாண்டோ 40, எரான் ஹன்சாமல் 4/78, இமல்க பிரபஷ்வர 2/30
றோயல் கல்லூரி, பாணந்துறை (இரண்டாம் இன்னிங்ஸ்): 134 (44.5) – நிலான் பெர்னாண்டோ 71, ரஷான் பெர்னாண்டோ 5/46, ஜீவந்த பெர்னாண்டோ 3/27, நாதித் விஷேந்திர 2/18
மொறட்டு வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்): 83 (27.2) – நிஷான் மதுஷிக்க 28, எரான் ஹன்சமால் 5/43, பானுற பிரசஞ்சித் 4/18
போட்டியின் முடிவு : றோயல் கல்லூரி, பாணதுறை 3 ஓட்டங்களால் வெற்றி