2016/17ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் டிவிஷன் – I கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இன்று இரண்டு நாட்கள் கொண்ட மூன்று போட்டிகள் முடிவுற்ற நிலையில், இரண்டு போட்டிகள் இன்று ஆரம்பமாயின.
புனித பேதுரு கல்லூரி எதிர் கண்டி தர்மராஜ கல்லூரி
79 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த புனித பேதுரு கல்லூரி 67.5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 275 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
புனித பேதுரு கல்லூரி சார்பாக சிறப்பாக துடுப்பாடிய லக்ஷின ரோட்ரிகோ ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும் சலித் பெர்னாண்டோ 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் ருக்மல் திசாநாயக்க 111 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய கண்டி தர்மராஜ கல்லூரி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இன்றைய நாளுக்காக 60 ஓவர்கள் துடுப்பாடிய அவ்வணி 8 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்று தோல்வியின் விளிம்பில் இருந்த போது இன்றைய நாள் ஆட்டம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
தர்மராஜ கல்லூரி சார்பாக தேஷான் குணசிங்க கூடிய ஓட்டங்களாக 35 ஓட்டங்களை பதிவு செய்தார். அதே நேரம் முதல் இன்னிங்சுக்காக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த சதுர ஒபேசேகற இரண்டாம் இன்னிங்சுக்காக 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்சை வெற்றிகொண்டதன் மூலம் புனித பேதுரு கல்லூரி புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
போட்டியின் சுருக்கம்
தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) : 168 (66.3) – கிஹான் விதாரண 45, நிவந்த ஹேரத் 43, முஹம்மட் அமீன் 6/58, சத்துர ஒபேசேகர 4/51
புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) : 275/5d (67.5) – லக்க்ஷின ரொட்ரிகோ 77*, சுலக்ஷன பெர்னாண்டோ 46, சலித்த பெர்னாண்டோ 78, சந்தோஷ் குணதிலக்க 35, தேஷான் குணசிங்க 2/51, ருக்மல்திசாநாயக்க 2/111
தர்மராஜ கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) : 126/8 (60) – தேஷான் குணசிங்க 35, சத்துர ஒபேசேகர 3/50
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. புனித பேதுரு கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி.
புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் கேகாலை மரியார் கல்லூரி
விக்கெட் இழப்பின்றி இரண்டாவது நாளாக முதல் இன்னிங்சுக்காக துடுப்பாட்டத்தை தொடர்ந்த புனித மரியார் கல்லூரி, ஜோசப் வாஸ் கல்லூரியின் அதிரடி பந்து வீச்சில் 35.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதிரடியாக பந்து வீசிய தனஞ்சய பெரேரா 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து இரண்டாம் இன்னின்சுக்காக களமிறங்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி 113 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
தனஞ்சய பெரேரா 41 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பதிவு செய்தார். அதனை தொடர்ந்து 320 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய புனித மரியார் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 39 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ஒட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
சிறப்பாக பந்து வீசிய தனஞ்சய பெரேரா 37 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்திய அதே நேரம் எஸ். எச். சிரியந்த 32 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாக பெற்றுக்கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 310/8d (83.4) – சந்தருவன் பெர்னாண்டோ 98, யொஹான் பீரிஸ் 101*, கயான் உடகே 3/63
கேகாலை புனித மரியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 103 (35.1) – தனஞ்சய பெரேரா 7/29
புனித ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 113/5d (32) – தனஞ்சய பெரேரா 41
கேகாலை புனித மரியார் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 116/7 (39) – எஸ் எச். சிரியந்த 32, தனஞ்சய பெரேரா 4/37, மதுஷான் ரணதுங்க 2/45
முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
காலி மகிந்த கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி
9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த மஹிந்த கல்லூரி இன்றைய நாளுக்காக ஒரே ஒரு ஓட்டத்தினை பெற்று இறுதி விக்கெட்டையும் இழந்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய புனித பெனடிக்ட் கல்லூரி இன்றைய நாள் ஆட்ட நேரம் நிறைவு வரை துடுப்பாடி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ஓட்டங்களை பெற்று முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது.
அவ்வணி சார்பாக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய டிலான் சதுரங்க ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை விளாசினார். அதே நேரம் மகிந்த கல்லூரி சார்பாக வினுர ஹிரஞ்சித் மற்றும் பசன் ரன்மல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இரு அணிகளும் சமபலம் மிக்க அணிகளாக இருந்ததனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்ற போதும் முதல் இன்னிங்சில் வெற்றி பெற்ற புனித பெனடிக்ட் கல்லூரிக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன.
போட்டியின் சுருக்கம்
காலி மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 227 (98.5) – வினுர ஹிரஞ்சித் 58, கவிந்து எதிரிவீர 42, ரிஷான் கவிந்த 28, மஹேஷ தீக்க்ஷன 3/54, கவீஷ ஜயதிலக்க 2/45
புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 244/6 (91) – டிலான் சதுரங்க 102 *, சமிந்து விஜேசிங்க 38, துலந்த லெவின் 33, ஷெஹான் பெர்னாண்டோ 39, வினுர ஹிரஞ்சித் 2/24, பசன் ரன்மல் 2/44
டி.எஸ். சேனநாயக்க கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி
முதல் சுற்றுப்போட்டிகளுக்காக பங்குபற்றிய இவ்விரு அணிகளில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நாலந்த கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரியை முதலில் துடுப்பாடுமாறு பணித்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி 44.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
சிறப்பாக பந்து வீசிய கலன பெரேரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய நாலந்த கல்லூரி 28 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்று முதல் இன்னின்சில் தோல்வியைத் தழுவியது.
சிறப்பாக பந்து வீசிய முதித்த லக்ஷான் 30 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய டி.எஸ். சேனநாயக்க கல்லூரி இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து காணப்படுகிறது. கலன பெரேரா 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.
போட்டிச் சுருக்கம்
டி.எஸ். சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 163 (44.2) – விஹான் குணசேகர 25, டொரின் பிட்டிகல 25, முதித்த லக்ஷான் 22, மெத்சித் ஜயமன்ன 21*, கலன பெரேரா 3/47, மதுஷான் ஹசரங்க 2/31, லக்ஷித ரசங்கன 2/28, உமேஷ்க தில்ஷான் 2/19
நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 116 (28) – அவிஷ்க பெரேரா 26, லக்ஷித ரசங்கன 27, முதித்த லக்ஷான் 7/30, தத்சார பண்டார 2/39
டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 31/3 (9) – கலன பெரேரா 2/15
சாஹிரா கல்லூரி எதிர் மொரட்டு வித்தியாலயம்
இன்று ஆரம்பித்த C குழுவுக்கான போட்டியொன்றில் கொழும்பு சாஹிரா கல்லூரி மற்றும் மொரட்டு வித்தியாலயம் ஆகியன மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மொரட்டு வித்தியாலயம், சாஹிரா கல்லூரியை முதலில் துடுப்படுமாறு பணித்தது. அதனை அடுத்து களமிறங்கிய அவ்வணி மொரட்டு வித்தியாலய அணயின் நேர்த்தியான பந்து வீச்சில் முதல் இன்னிங்சுக்காக 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. கூடிய ஓட்டங்களாக முஹம்மது ஷக்கி 32 ஓட்டங்களையும் முஹம்மது ரமீஸ் 29 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.
சாஹிரா அணிக்கு நெருக்கடி கொடுத்த மொரட்டு வித்தியாலயம் பந்து வீச்சாளரான ரஷான் பெர்னாண்டோ 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து களமிறங்கிய மொரட்டு வித்தியாலயம் விக்கெட் இழப்பின்றி 46 ஓவர்களுக்கு 129 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
சாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்க்ஸ்): 136 (47.5) – முஹம்மது ஷக்கி 32, முஹம்மது ரமீஸ் 29, சஜித் சமீர 27, ரஷான் பெர்னாண்டோ 5/28
மொறட்டு வித்தியாலயம் (முதல் இன்னிங்க்ஸ்): 129/0 (46) – ஷேஹத சொய்சா 60*, நிஷான் மதுஷ்க 57*