சிங்கர் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு 1 (டிவிஷன் 1) பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இன்று (20) நான்கு போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் பெரும்பாலான போட்டிகள் போதிய வெளிச்சமின்மை காரணமாக சமநிலையுடன் நிறைவுக்கு வந்தன.
டி மெசனொட் கல்லூரி, கந்தானை எதிர் ஸாஹிரா கல்லூரி, மருதானை
மருதானை ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நேற்று (19) ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸாஹிரா கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டி மெசனொட் கல்லூரி அணி 63.5 ஓவர்களுக்கு முகங்கொடுத்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அஸ்ஹர் கல்லூரிக்காக சகலதுறைகளிலும் அசத்திய ஷயீத் நளிம்
அந்த அணி சார்பில், சசிந்து ஷசங்க மற்றும் ரொமால் பெர்னாண்டோ ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக சசிந்து ஷசங்க 45 ஓட்டங்களையும், ரொமால் பெர்னாண்டோ 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஸாஹிரா கல்லூரி சார்பாக மொஹமட் காலித் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அரவிந்த மற்றும் எம்.எல் ஸ்லாசா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி டில்ஷார சமிந்த, எம்.எல் ஸ்லாசா ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.
ஸாஹிரா கல்லூரி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷார சமிந்த 77 ஓட்டங்களையும், எம்.எல் ஸ்லாசா 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் டி மெசனொட் கல்லூரிக்காக ரொமால் பெர்னாண்டோ 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக டி மெசனொட் கல்லூரி தயாராகிய போது போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர்களால் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
எவ்வாறாயினும், போட்டியின் முதல் இன்னிங்ஸை மருதானை ஸாஹிரா கல்லூரி வெற்றி பெற்றது.
போட்டியின் சுருக்கம்
டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதல் இன்னிங்ஸ்) – 180 (63.5) – சசிந்து ஷசங்க 45, ரொமால் பெர்னாண்டோ 36, எம் காலித் 3/26, அரவிந்த் 2/33, எம்.எல் ஸ்லாசா 2/35
ஸாஹிரா கல்லூரி, மருதானை (முதல் இன்னிங்ஸ்) – 207/7 (53) – டில்ஷார சமிந்த 77, எம்.எல். ஸ்லாசா 61, யசித் சமரவிக்ரம 28, விஹங்க சித்துமின 2/50, ரொமால் பெர்னாண்டோ 4/35
போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.
புனித ஜோசப் கல்லூரி, மருதானை எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகல்
புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நிறைவுற்ற மலியதேவ கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையிலான இப்போட்டி சமநிலை அடைந்தது.
விராஜ், அரோனின் அபார பந்துவீச்சினால் மொறட்டு கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி
போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் 341 ஓட்டங்களை அவர்களின் முதல் இன்னிங்சுக்காக குவித்தனர். இதில், ஷெவோன் டெனியல் 116 ஓட்டங்கள் சேர்த்து தனது தரப்பை பலப்படுத்தியதுடன், ஷெரான் பொன்சேகா (83), மிரங்க விக்ரமகே (61) ஆகியோர் அரைச் சதங்களை குவித்து அசத்தினர்.
மலியதேவ கல்லூரிக்காக பந்துவீச்சில் பசிந்து தென்னகோன் 95 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
பின்னர், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. நிசன்ஜன ஹெட்டியாரச்சி அக்கல்லூரிக்காக 73 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் புனித ஜோசப் கல்லூரிக்காக லிந்த செனவிரத்ன 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர், தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து காணப்பட்ட நிலையில், இரண்டாம் நாளின் ஆட்ட நேரம் முடிவுக்கு வர போட்டி சமநிலை அடைந்தது.
இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற புனித ஜோசப் கல்லூரி அதற்கான புள்ளிகளை பெற்றுக் கெண்டது.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 341 (79) – ஷெவோன் டெனியல் 116, ஷெரான் பொன்சேகா 83, மிரங்க விக்ரமகே 61*, பசிந்து தென்னகோன் 5/95, விதத் படெபொல 2/41
மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதல் இன்னிங்ஸ்) – 212 (66.4) – நிசன்ஜன ஹெட்டியாரச்சி 73, கெவின் பண்டார 29, முதித்த பிரேமதாஸ 26, சாலிந்த செனவிரத்ன 5/59
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 40/1 (10)
போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுற்றது.
றிச்மண்ட் கல்லூரி, காலி எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு
அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றிச்மண்ட் கல்லூரி வீரர்கள் முதல் இன்னிங்ஸிற்காக 8 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டனர்.
றிச்மண்ட் கல்லூரி சார்பாக ஆதித்ய சிறிவர்தன மற்றும் விமுத் சப்னக ஆகியோர் தலா 55 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.
இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் கமேஷ் நிர்மல் 56 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி
றிச்மண்ட் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் அம்ஷி டி சில்வா 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், கல்ப நெத்சர மற்றும் திலும் சுதீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் பதம்பார்த்தனர்.
இதன்படி, பலோ ஒன் (Follow on) முறையில் இரண்டாம் இன்னிங்சுக்காக மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட ஆனந்த கல்லூரி அணியினர் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.
போட்டியின் சுருக்கம்
றிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 277/8d (67) – ஆதித்ய சிறிவர்தன 55, விமுத் சப்னக 55, திமுத் சந்தருவன் 44, பானுக மனோகர 30, வினூஜ கிரியெல்ல 25, திலும் சுதீர 24, ஜனிந்து ஜயவர்தன 5/98, லக்ஷித அமரசேகர 2/49
ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 110 (48) – காமேஷ் நிர்மல் 56, வினூஜ விஜேபண்டார 24, அம்ஷி டி சில்வா 4/35, கல்ப நெத்சர 3/25 திலும் சுதீர 3/43
ஆனந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 52/3 (20) – காமேஷ் நிர்மால் 35*, சுகீத் நிம்னத 2/20
போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.
புனித பெனடிக் கல்லூரி, கொழும்பு எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு
வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாடிய பெனெடிக் கல்லூரி அணி, முதல் இன்னிங்சுக்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டியின் முதல் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
எனினும், சீரற்ற காநிலையால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் பாதிக்கப்பட, போட்டியை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
புனித பெனெடிக் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 174/7 (58) – ஷெஹான் பெர்னாண்டோ 48, மஹீஷ் தீக்ஷன 40*, கவிரு பெரேரா 29, சனோஜ் பெரேரா 23, தெனுவன மெண்டிஸ் 2/20, சிதத் தர்மசிறிவர்தன 2/22 மொவின் சுபசிங்க 2/32
போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<