லக்‌ஷித ரசன்ஜனவின் சகலதுறை ஆட்டத்தால் நாலந்த கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

181

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு – 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 3 போட்டிகள் இன்று (29) நிறைவுக்கு வந்தன. இதில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என அசத்திய கொழும்பு நாலந்த கல்லூரி அணி, மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கெதிராக இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்தது.

நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நேற்று (28) ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நாலந்த கல்லூரி அணியினர், லக்‌ஷித ரசன்ஞன ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட சதம் மற்றும் சமிந்து விஜேசிங்க (54), ரவின் டி சில்வா (50) ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட்டடுக்களை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

நிராஜின் அரைச் சதத்தால் வெற்றியை சுவைத்த மொறட்டு மகா வித்தியாலயம்

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி வீரர்களுக்கு 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதன்படி, பலோவ் ஒன் (Follow on) முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட வெஸ்லி கல்லூரி அணி, மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தைப் போன்று பந்துவீச்சிலும் அசத்திய நாலந்த கல்லூரியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் லக்‌ஷித ரசன்ஜன 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 315/6d (79) – லக்‌ஷித ரசன்ஞன 100*, சமிந்து விஜேசிங்க 54, ரவின் டி சில்வா 50, ஜயோத் கல்தேரா 35, தில்ஹார பொல்கம்பொல 33, ஷெனால் தங்கல்ல 2/24

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 107 (43.4) – கவிந்து பெரேரா 26, சஹில் டயஸ் 20, லக்‌ஷித ரசன்ஜன 4/23, சமிந்து விஜேசிங்க 4/30

வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/0 – 49 (26.4) – புத்திம விஜேசுந்தர 21, கவீஷ் மதுரப்பெரும 3/17, லக்‌ஷித ரசன்ஜன 3/19

முடிவு – நாலந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் வெற்றி


புனித பேதுரு கல்லூரி, பம்பலப்பிட்டிய எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

சன்தூஷ் குணதிலக்கவின் சதம் மற்றும் ரன்மித் ஜயசேனவின் அரைச்சதங்களின் உதவியுடன் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற புனித பேதுரு கல்லூரி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்தது.

பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இளையோர் ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி

புனித பேதுரு கல்லூரி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் சன்தூஷ் குணதிலக்க 104 ஓட்டங்களையும், ரன்மித் ஜயசேன 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி, அஷான் பெர்னாண்டோவின் அரைச்சதத்தின் (65) உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் உவின் செனவிரத்ன 4 விக்கெட்டுகளையும், தாரிக் சதூர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி, எதிரணியின் அபார பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 67 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பந்துவீச்சில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் ரவிந்து பெர்னாண்டோ 34 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், பசிந்து உஷெட்டி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் பதம்பார்த்தனர்.

தொடர்ந்து 121 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியினர், 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

பந்துவீச்சில இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக செயற்பட்ட தாரிக் சதூர் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 304/6d (73) – சந்தூஷ் குணதிலக்க 104, ரன்மித் ஜயசேன 56, பானுக டி சில்வா 49, ரிசிக சந்தூஷ் 21, பசிந்து உஷெட்டி 2/72

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 250 (68.1) – அஷான் பெர்னாண்டோ 65, ரவிந்து பெர்னாண்டோ 45, அமந்த பெரேரா 39, கெவின் பெரேரா 30, உவின் செனவிரத்ன 4/65, தாரிக் சதூர் 3/31

புனித பேதுரு கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 67 (32.3) – கனிஷ்க மதுவந்த 21, ரவிந்து பெர்னாண்டோ 6/34, பசிந்து உஷெட்டி 3/31

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 53/5 (18) – அமந்த பெரேரா 30, சஹன் பெரேரா 27*, தாரிக் சதூர் 4/24

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது.


புனித அனா கல்லூரி, குருநாகல் எதிர் புனித பெனெடிக்ட் கல்லூரி, கொழும்பு

கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி மைதானத்தில் நேற்று (28) தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் புனித அனா கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக கவிந்து ரணசிங்க ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களைப் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்தாலும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை

பந்துவீச்சில் பெனடிக் கல்லூரியின் மலிந்த பெரேரா மற்றும் கவீஷ ஜயதிலக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய பெனடிக் கல்லூரி அணி, பசன் சுவஹஸ் (97) மற்றும் விஹங்க ருவனரன் (52) அரைச்சதங்களின் உதவியால் 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 115 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடிய அனா கல்லூரி வீரர்கள் 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித அனா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 191 (82.5) – கவிந்து ரணசிங்க 88*, கவிந்து ஏக்கநாயக்க 32, மலிந்த பெரேரா 3/28, கவீஷ ஜயதிலக்க 3/57, சனோஜ் பெரேரா 2/23

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 306/7 (90) – பசன் சுவஹாஸ் 97, விஹங்க ருவனரன் 52*, கவீஷ ஜயதிலன்ன 39, கவிரு பெரேரா 35, இமேஷ் பெர்னாண்டோ 21*, ஹசிந்து கவியரத்ன 3/76

முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<