இலகு வெற்றியை சுவீகரித்த மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் மஹிந்த கல்லூரி அணிகள்

165

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட டிவிஷன் 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் மேலும் சில போட்டிகள் இன்று நடைபெற்றன

இசிபதன கல்லூரி, கொழும்பு எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

கடுநேரிய மைதானத்தில் நேற்று (25) காலை ஆரம்பமான இப்போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இசிபதன கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி இசிபதன கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. இசிபதன கல்லூரி சார்பாக ஷமில்க விக்ரமதிலக ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் பசிந்து உஷெட்டி 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணி அறிவிப்பு

13 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணி எவ்வித விக்கெட் இழப்புமின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

இசிபதன கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 189 (41) – அயன சிறிவர்தன 50, அனுமப ஹேரத் 37, கால்க் அமத் 36, அவீஷ பகிந்த 3/35, ரவிந்து பெர்னாண்டோ 3/52, பசிந்து உசெட்டி 2/25, லசித் க்ரூஸ்புள்ளே 2/45

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 360 (76.3) – லசித் க்ரூஸ்புள்ளே 74, ரோஷேன் பெர்னாண்டோ 57, ரவிந்து பெர்னாண்டோ 61, கெவின் பெரேரா 26. மதுஷிக சந்தருவன் 4/59

இசிபதன கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 182 (42.4) – ஷமில்க விக்ரமதிலக 59*, அயன சிறிவர்தன 38, பசிந்து உசெட்டி 7/79, லசித் க்ரூஸ்புள்ளே 3/31

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 13/0 (1.4)

முடிவு – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.


மஹிந்த கல்லூரி, காலி எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை

மஹிந்த கல்லூரி மைதானத்தில் நேற்று  காலை ஆரம்பமான இப்போட்டியில் மஹிந்த கல்லூரி அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சுக்காக 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடை நிறுத்திக்கொண்டது.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடியா டி மெசனொட் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் நிமா பெர்னாண்டோ 53 ஓட்டங்களையும் சாலிய ஜூட் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பசன் பெதன்கொட 3 விக்கெட்டுக்களையும் சுபானு ராஜபக்ச மற்றும் கவிந்து எதிரிவீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பலோவ் ஒன் (follow on) முறைக்கு தள்ளப்பட்டு தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த டி மெசனொட் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பசிந்து ராஜமுநேந்திரா 43 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் பசன் பெதன்கொட 4 விக்கெட்டுக்களையும் நவோத் பரணவிதான 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 330/3d (73) – வினுர துல்சார 123, நவோத் பரணவிதான 121, KK கெவின் 50*

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதலாவது இன்னிங்ஸ்) – 213 (73.1) – நிமா பெர்னாண்டோ 53, சாலிய ஜூட் 41, பசன் பெதன்கொட 3/85, சுபானு ராஜபக்ச 2/12, கவிந்து எதிரிவீர 2/57

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 121 (30.1) – பசிந்து ராஜமுநேந்திரா 43, பசன் பெதன்கொட 4/49, நவோத் பரணவிதான 3/19, அஷேன் கந்தம்பி 2/12

மஹிந்த கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 6/0 (2.2)  

முடிவு – மஹிந்த கல்லூரி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

மாத்தறை உயன்வத்த கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தோமியர் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை திரித்துவக் கல்லூரி அணிக்கு வழங்கியது.

பந்து வீச்சில் பிரகாசித்த அசாம் மற்றும் சனொன் 

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய திரித்துவக் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் தோமியர் கல்லூரி சார்பாக லஹிரு தில்ஷான் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தோமியர் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் திரித்துவக் கல்லூரியின் ட்ரேவோன் பெர்சிவேல் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய திரித்துவக் கல்லூரி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ட்ரேவோன் பேர்சிவேல் 68 ஓட்டங்களையும் ஹசிந்த ஜயசூரிய 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் நிசந்திக ஜயவீர 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 122 (44.3) – ஹசிந்த ஜயசூரிய 43, லஹிரு தில்ஷான் 5/17

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதலாவது இன்னிங்ஸ்) – 119 (59.3) – கிஷாந்த ஜயவீர 35*, ட்ரேவோன் பெர்சிவேல் 5/15

திரித்துவக் கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 201/6 (46.2) – ட்ரேவோன் பேர்சிவேல் 68, ஹசிந்த ஜயசூரிய 42, புபுது பண்டார 38, நிசந்திக ஜயவீர 3/40

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 111/6 (59)

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


ஏனைய போட்டிகளின் சுருக்கம்…

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 105 (45.4) – ஷெஹான் அவிஷ்க 28, முஹம்மட் உபைதுல்லாஹ் 5/42, ஷெனால் தங்கல்ல 4/35

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 136 (49.4) – ஜனித் சந்தகெலும் 28, ஹசித் கீசர 25, ஷெனால் தங்கல்ல 24, கௌமால் நாணயக்கார 6/44 

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.    


மலியதேவ கல்லூரி, குருநாகல் எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி

மலியதேவ கல்லூரி, குருநாகல் (முதலாவது இன்னிங்ஸ்) – 175 (51.4) – முதித்த பிரேமதாச 63, சஞ்சீவன் பிரியதர்ஷன 24, ஹுசிந்து நிசங்க 5/30, கனிஷ்க ஜயசேகர 3/31, நிம்சர அத்தனகல்ல 2/40

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதலாவது இன்னிங்ஸ்) – 226 (39.4) – நதீர பாலசூரிய 56, மஞ்சித் ராஜபக்ச 45, M பவித்ரன் 28, பசிந்து தென்னகோன் 2/27, மதுரங்க நவீன் 2/54

மலியதேவ கல்லூரி, குருநாகல் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 225/3 (55) – ஷாக்க அதபத்து 69, முதித்த பிரேமதாச 61*, துலாஜ் ரணதுங்க 50, ஹுசிந்து நிஸ்ஸங்க 2/65  

முடிவு -போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவு. முதல் இன்னிங்சின்படி சில்வெஸ்டர் கல்லூரி வெற்றி பெற்றது.


நாலந்த கல்லூரி, கொழும்பு எதிர் புனித செர்வசியஸ் கல்லூரி, மாத்தறை

நாலந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 194 (70) – ருசிறு டி சில்வா 56*, டில்ஹார பொல்கம்பொல 31, பசிந்து மனுபிரிய 4/62, இசுரு உதயங்க 2/24

புனித செர்வசியஸ் கல்லூரி, மாத்தறை (முதலாவது இன்னிங்ஸ்) – 50/6 (23)  மதுஷான் ஹசரங்க 3/17

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.