துனித் வெல்லகே 11 விக்கெட்டுகள்; புனித ஜோசப் கல்லூரிக்கு இலகு வெற்றி

207

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகள் இன்று (03) நடைபெற்றன.

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் டி மெசனொட் கல்லூரி, கந்தானை

மருதானை புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ‘D’குழுவுக்கான இப்போட்டியில் மெசனொட் கல்லூரியை முதல் இன்னிங்சில் 94 ஓட்டங்களுக்கு சுருட்டியதன் மூலம் புனித ஜோசப் கல்லூரி இரண்டாவது நாளில் வெற்றியை உறுதி செய்ய முடிந்தது.

எனினும் டி மெசனொட் கல்லூரி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடி 254 ஓட்டங்களை பெற்றதன் மூலம் போட்டி இரண்டாவது நாள் மாலை வரை நீடித்தது. எனினும் சொந்த மைதானத்தில் ஆடும் புனித ஜோசப் கல்லூரி தனது நான்காவது இன்னிங்சில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த ஓட்ட இலக்கை 6 விக்கெட்டுகளை இழந்து பெற்றது.

WBBL தொடரில் ஒப்பந்தமாகிய முதல் இலங்கை வீராங்கணையாக சாமரி

இடது கை சுழல்பந்து வீச்சாளர் துனித் வெல்லகே ஜோசப் கல்லூரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவர் இப்போட்டியில் 124 ஓட்டங்களை கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.     

போட்டியின் சுருக்கம்

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (முதல் இன்னிங்ஸ்) – 94 (32) – பசிந்து ராகமுனிந்த 28*, நதுன் டில்ஷான் 27, துனித் வெல்லகே 6/32, அஷேன் டேனியல் 3/20  

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 254 (49.3) – ரெவான் கெல்லி 68, லக்ஷான் கமகே 67, ஜொஹானே டி சில்வா 42, சச்சிந்த மஹிந்தசிங்க 23, சாலிய ஜுட் 4/49, பிரவீன் பொன்சேகா 3/31, ரொமால் பெர்னாண்டோ 3/54

டி மெசனொட் கல்லூரி, கந்தானை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 254 (60.1) – மிதில கீத் 54, பசிந்து ராகமுனிந்த 51, பிரவீன் பொன்சேகா 45, நிம்ன பெர்னாண்டோ 32, மிதுல் செனரத் 29, துனித் வெல்லகே 5/92, லக்ஷான் கமகே 2/42

புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 95/6 (23.1) – சச்சிந்த மஹிந்தசிங்க 28*, மிதில கீத் 4/52

முடிவு: புனித ஜோசப் கல்லூரி 4 விக்கெட்டுகளால் வெற்றி


தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ‘A’ குழுவுக்கான இப்போட்டியில் இடதுகை சுழல் பந்து வீச்சாளர் சந்தரு டயஸ் இரண்டாவது இன்னிங்சில் 30 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தர்ஸ்டன் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

முதல் நாளில் சவன் பிரபாஷ் 90 ஓட்டங்களைப்பெற வலுவான நிலையை எட்டிய தர்ஸ்டன் கல்லூரி நான்காவது இன்னிங்சில் 26 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்து மாத்தறை புனித தோமியர் கல்லூரியை வீழ்த்தியது.  

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (முதல் இன்னிங்ஸ்) – 171 (68.5) – தரூஷ காவிந்த்ய 52, லஹிரு டில்ஷான் 35, நிபுன் லக்ஷான் 6/36, தனுஷ்க பெர்னாண்டோ 3/43

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 247 (71.2) – சவன் பிரபாஷ் 90, நிபுன் லக்ஷான் 48, நிஷான் விக்ரமாரச்சி 29, இமேஷ் விரங்க 20, சச்சிர ரஷ்மிக 3/86, லஹிரு டில்ஷான் 2/41

புனித தோமியர் கல்லூரி, மாத்தறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 101 (39) – லஹிரு டில்ஷான் 34, மிஷால் அமோத 29, சந்தரு டயஸ் 8/30, அயேஷ் ஹர்ஷன 2/30

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 26/0 (2.5)

முடிவு – தர்ஸ்டன் கல்லூரி 10  விக்கெட்டுகளால் வெற்றி


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ

நாணய சுழற்சியில் வென்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியினால் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தோமியர் கல்லூரி, மனீஷ ரூபசிங்க பெற்ற அரைச்சதத்தின் உதவியோடு 144 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மேற்கிந்திய தீவுகளை போராடி வீழ்த்தியது இலங்கை A அணி

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி 44.2 ஓவர்கள் துடுப்பாடியபோதும் 86 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததால் புனித தோமியர் கல்லூரி வலுவான நிலையை எட்டியது.

புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் நாளில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து தோமியர் கல்லூரி வேகமாக 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் ஆட்ட நேர முடிவில் 82 ஓட்டங்களால் முன்னிலை பெற்று, நாளை இரண்டாவது நாளைத் தொடரவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்) – 144 (41.4) – மனீஷ ரூபசிங்க 71, துலித் குணரத்ன 27, சந்துன் பெர்னாண்டோ 5/33, குஞ்சன பெரேரா 3/14

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ (முதல் இன்னிங்ஸ்) – 86 (44.2) – சவிந்து பீரிஸ் 34, விஷ்வ சதுரங்க 26, ஷன்னொன் பெர்னாண்டோ 5/36, துலித் குணரத்ன 4/18

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 24/3 (12) – கௌமல் நாணயக்கார 2/12


புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய

புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் ‘C’ குழுவுக்காக நடைபெறும் இப்போட்டியில் புனித பேதுரு கல்லூரி அணித்தலைவர் சந்தூஷ் குணத்திலக்க தமது திறமையை வெளிப்படுத்தினார். குணத்திலக்க 129 ஓட்டங்களை பெற, புனித பேதுரு கல்லூரி 282 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை அடைந்தது.

தர்மபால கல்லூரி சார்பாக பந்து வீச்சில் டில்ஷான் டி சில்வா மற்றும் சமிந்து சமரசிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தர்மபால கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் நாளை தொடரும்

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 282/8d (78) – சந்தூஷ் குணதிலக்க 129*, நிபுனக்க பொன்சேக்கா 42, சுலக்ஷன பெர்னாண்டோ 42, டில்ஷான் டி சில்வா 3/74, சமிந்து சமரசிங்க 3/94

தர்மபால கல்லூரி, பன்னிபிட்டிய (முதல் இன்னிங்ஸ்) – 50/2 (20) – ஷிவான் பெரேரா 2/04


ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகலை

ஆனந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மலியதேவ கல்லூரியினால் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட ஆனந்த கல்லூரி, அதனை முழுமையாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு 61.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 297 ஓட்டங்களை பெற்றது. தமிந்த ரெஷான் (100) மற்றும் ஷமல் இர்ஷான் (89*) ஆகியோர் அணிக்கு வலுச்சேர்த்தனர்.

கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் ஹேரத், அசேலவுக்கு அதிக கௌரவம்

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த மலியதேவ கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இரண்டாவதும் இறுதியுமான நாள் ஆட்டம் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 297 (61.2) – தமிந்த ரெஷான் 100, ஷமல் ஹிரூஷன் 89*, கலன விஜேசிறி 27, லஹிரு ஹிரன்ய 24, பிரைன் கருணாநாயக்க 4/62, துலாஜ் ரணதுங்க 2/56, மதுரங்க நவீன் 2/70

மலியதேவ கல்லூரி, குருநாகலை (முதல் இன்னிங்ஸ்) – 40/1 (16) – முதித பிரேமதாச 20*