இன்று நிறைவடைந்திருக்கும் 19 வயதுக்குட்பட்ட பிரிவு I (டிவிஷன் – I) பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், மருதானை புனித ஜோசப் கல்லூரி அணி 312 ஓட்டங்களால் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியினை அபாரமாக வெற்றி கொண்டுள்ளது.
புனித பத்திரிசியார் கல்லூரிக்கு நெருக்கடி தந்த அஷான் டேனியல்
19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான (இரண்டு நாட்கள் கொண்ட) ‘சிங்கர் கிண்ண’ …
மருதானை புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியில் நேற்றைய நாள் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி ஜோஹன்னே டி சில்வா மற்றும் சசிந்த மஹிந்சிங்க ஆகியோரின் அரைச் சதங்களுடன் முதல் இன்னிங்சுக்காக 285 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது. இதையடுத்து போட்டியின் முதல் நாளிலேயே முதல் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி, அஷியன் டேனியல் மற்றும் துனித் வெல்லால்கே ஆகியோரின் அபார பந்து வீச்சினால் வெறும் 38 ஓட்டங்களுடன் சுருண்டு கொண்டது. இதனையடுத்து போட்டியின் இரண்டாம் நாளான இன்று 247 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த மருதானை புனித ஜோசப் கல்லூரிக்கு செவான் ரஸூல் அரைச் சதம் ஒன்றினை விளாசி வலுவளித்தார்.அவர் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 56 ஓட்டங்களின் துணையுடன் 35 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களினைப் பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்சினை புனித ஜோசப் கல்லூரி நிறுத்திக்கொண்டது. ஜோசப் கல்லூரியில் பறிபோயிருந்த விக்கெட்டுக்களில் ஆளுக்கு இரண்டு வீதம் யாழ்ப்பாண வீரர்களான DN. திலுக்ஷன் மற்றும் G. ரதீசன் ஆகியோர் பங்குபோட்டுக் கொண்டனர். புனித ஜோசப் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் காரணமாக வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட அதி சவலான 388 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த யாழ்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி முதல் இன்னிங்சில் மிரட்டியிருந்த அஷியன் டேனியலின் பந்து வீச்சினை எதிர்கொள்ள மறுபடியும் தடுமாறியது. இதனால் மீண்டும் 75 ஓட்டங்களுக்குள் வீழ்ந்த யாழ்ப்பாண புனித பத்திரிசியார் கல்லூரி, மருதானை புனித ஜோசப் கல்லூரியிடம் படுதோல்வியடைந்தது.
ரெட்புல் பல்கலைக்கழக உலகக் கிண்ணத்தினைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா
நடப்புச் சம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி 2௦17ம் ஆண்டுக்கான ரெட்புல் …
யாழ்ப்பாண தரப்பு சார்பாக அதிகபட்சமாக இவான் ரோசந்தன் 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுபடியும் பந்து வீச்சில் அசத்திய அஷியன் டேனியல் 27 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 285/8d (63.5) ஜோஹன்னே டி சில்வா 62, சசிந்த மதுசிங்க 59*, தினால் அனுருத்த 45, J. அனோஜன் 3/68
புனித பத்திரிசியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 38/10 (22.3) அஷியன் டேனியல் 5/6, துனித் வெல்லால்கே 4/10
புனித ஜோசப் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 140/6d (35) செவான் ரஸூல் 56*, தினால் அனுருத்த 28, DN. திலுக்ஷன் 2/29, G. ரதீசன் 2/34
புனித பத்திரிசியார் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 75/10 (23.4) இவான் ரோசந்தன் 20*, அஷியன் டேனியல் 7/27
போட்டி முடிவு – புனித ஜோசப் கல்லூரி 312 ஓட்டங்களால் வெற்றி