சுஹங்கவின் சதத்தோடு நாலந்த கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

193

19 வயதின் கீழான டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (11) இரண்டு போட்டிகள் முடிவடைந்தது.

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி எதிர் நாலந்த கல்லூரி

பண்டாரகம பொது மைதானத்தில் முடிவடைந்த கொழும்பின் முக்கிய பாடசாலைகளுக்கு இடையிலான இப்போட்டியில் டி.எஸ் சேனநாயக்க கல்லூரியை நாலந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வீழ்த்தியது.

நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பாடிய டி.எஸ் சேனநாயக்க வீரர்கள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை குவித்திருந்தனர். பின்னர் தங்களது முதல் இன்னிங்சில் ஆடிய நாலந்த வீரர்களுக்கு சுஹங்க விஜேவர்தன சதம் (126) கடந்து உதவினார். இதனால் நாலந்த கல்லூரி 293 ஓட்டங்களை முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்டது.

நாலந்த கல்லூரியின் துடுப்பாட்டத்தை அடுத்து டி.எஸ் சேனநாயக்க வீரர்களுக்கு இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 148 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது. இந்த ஓட்டங்களை தாண்டும் நோக்கோடு தம்முடைய இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 39.5 ஓவர்களில் 133 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது.

டெஸ்ட் தரவரிசையில் அதிரடி மாற்றங்கள் : சந்திமால் மேலும் முன்னேற்றம்

டி.எஸ் சேனநாயக்க கல்லூரியை மட்டுப்படுத்த நாலந்த கல்லூரிக்கு பந்துவீச்சில் உதவியாக காணப்பட்ட ரவீன் டி சில்வா, கவீஷ் மதுரபெரும ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 145 (43.3) – முதித லக்ஷன் 57, சமிந்து விஜேசிங்க 4/21, உமேஷ்க தில்ஷான் 4/22

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 293 (63.1) – சுஹங்க விஜேவர்தன 126, மெதுஷன் குமார 5/68

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 133 (39.5) – துவின் லக்ஷன 40, ரவீன்  டி சில்வா 3/24, கவீஷ் மதுரப்பெரும 3/28

முடிவு – நாலந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி


லும்பினி கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகல்

குருநாகல் மலியதேவ கல்லூரி மற்றும் கொழும்பு லும்பினி கல்லூரி அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி சமநிலை அடைந்தது.

நேற்று (10) மலியதேவ கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தை நிறைவு செய்த லும்பினி கல்லூரி அணி 269 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றிருந்தது. அடுத்து துடுப்பாடிய மலியதேவ கல்லூரி அணியினர் 166 ஓட்டங்களையே தம்முடைய முதல் இன்னிங்சில் பெற்றனர். இதன்பின்னர் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் போதாத காரணத்தினால் மலியதேவ வீரர்களுக்கு மீண்டும் துடுப்பாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதனடிப்படையில் மீண்டும் துடுப்பாடிய அவர்கள் இம்முறை சிறப்பாக செயற்பட்டு கவின் பண்டார (69), முதித பிரேமதாச (60) ஆகியோரின் அரைச்சதங்களுடன் 66.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 275 ஓட்டங்களை குவித்தனர்.

மலியதேவ கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 173 ஓட்டங்கள் லும்பினி கல்லூரி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சவால் நிறைந்த வெற்றி இலக்கைப் பெற தமது இரண்டாம் இன்னிங்சில் ஆடிய லும்பினி கல்லூரி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி சமநிலை அடைந்தது.

லும்பினி கல்லூரி அணியின் பந்துவீச்சில் விமுக்தி குலத்துங்க மொத்தமாக இப்போட்டியில் 11 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 269 (62.5) – கவின் ஹெமித்த 73, ஹேமல் லங்கார 60*, துலாஜ் ரணதுங்க 4/52

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 166 (46.5) – நிசஞ்சய ஹெட்டியராச்சி 44, துலாஜ் ரணதுங்க 41, கவின் ஹெமித்த 5/60, விமுக்தி குலத்துங்க 5/61

மலியதேவ கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 275 (66.2) – கவீன் பண்டார 69, முதித பிரேமதாச 60, சஞ்சீவன் பிரியதர்ஷன 44, விமுக்தி குலத்துங்க 6/105, கவின் ஹெமித்த 4/100

லும்பினி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 117/7 (20)

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


மஹிந்த கல்லூரி, காலி எதிர் புனித சில்வஸ்டர் கல்லூரி, கண்டி

தென், மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை அணிகள் பங்கெடுத்திருந்த இப்போட்டி மஹிந்த கல்லூரியின் சொந்த மைதானத்தில் இன்று தொடங்கியது. எதிரணியினால் பணிக்கப்பட்டு முதலில் துடுப்பாடிய மஹிந்த கல்லூரிக்கு நவோத் பரணவிதாரன சதம் (104)  கடந்து வலுவளித்தார். இவரோடு வினுர துல்ஷார, ரெஷான் கவிந்த ஆகியோரும் அரைச்சதங்களுடன் உதவ முதல் இன்னிங்சில் 307 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது மஹிந்த கல்லூரி அணி தமது ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது.

T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த புனித சில்வஸ்டர் கல்லூரி 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து பலவீனமாக காணப்பட்ட நிலையில் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 307/4d (69.4) – நவோத் பரணவிதான 104, வினுர துல்ஷார 85, ரெஷான் கவிந்த 54*, உசிந்து யெஷங்க 2/56

புனித சில்வஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 41/4 (23)

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்


புனித பெனடிக்ட் கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி, மாத்தறை

உயனவத்த மைதானத்தில் இன்று தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய புனித பெனடிக்ட் கல்லூரி 101 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து மோசமான முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. பெனடிக்ட் கல்லூரியை கட்டுக்குள் கொண்டுவந்த தோமியர் கல்லூரியின் பந்து வீச்சாளர்களில் லஹிரு தில்ஷான் மற்றும் தினேத் சித்தார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

பின்னர் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மாத்தறை தோமியர் கல்லூரி அணியும் ஓட்டங்கள் சேர்ப்பதில் சிரமத்தை எதிர்கொண்டு 131 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதில் ஜேசன் சார்ள்ஸ் 6 விக்கெட்டுக்களை பெனடிக்ட் கல்லூரி சார்பாக வீழ்த்தியிருந்தார்.

இரண்டு கல்லூரிகளினதும் முதல் இன்னிங்சுகளும் போட்டியின் முதல் நாளிலேயே நிறைவடைய தமது இரண்டாம் இன்னிங்சை பெனடிக்ட் கல்லூரி ஆரம்பித்து 6 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இன்றைய நாள் ஆட்ட நேரம் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித பெனடிக்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 101 (35.3) – லஹிரு தில்ஷான் 3/21, தினேத் சித்தார 3/21

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 131 (48.1) – ஹிரன்த லக்ஷான் 33, ஜேசன் சார்ள்ஸ் 6/53

புனித பெனடிக்ட் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 6/0 (6)

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.