அரையிறுதிப் போட்டிகளுக்கு சம்பத் வங்கி, கொமர்ஷல் கிரெடிட், டிமோ மற்றும் மாஸ் யுனிச்செலா அணிகள் தெரிவு

349
Singer MCA Premier T20

இன்று நடைபெற்ற 24ஆவது சிங்கர் MCA ப்ர்மியர் லீக் T2௦ காலிறுதிப் போட்டிகளில், டெக்ஸ்சர்ட் ஜேர்சி, மாஸ் யுனிச்செலா, ஹற்றன் நெஷனல் வங்கி, சம்பத் வங்கி, ஜோன் கீல்ஸ், டீமோ, கொமர்ஷல் கிரெடிட் மற்றும் மாஸ் எக்டிவ் ஆகிய எட்டு அணிகள் மோதிக்கொண்டன.

அந்த வகையில், குறிப்பிட்ட காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற சம்பத் வங்கி, கொமர்ஷல் கிரெடிட், டிமோ, மற்றும் மாஸ் யுனிச்செலா அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

ஹட்டன் நெஷனல் வங்கி எதிர் சம்பத் வங்கி

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சம்பத் வங்கி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஹற்றன் நெஷனல் வங்கி குறிப்பிட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஹற்றன் நெஷனல் வங்கி அணி சார்பாக மின்ஹாஜ் ஜலீல் 68 ஓட்டங்களையும், மாதவ வர்ணபுர 34 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர்.

பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசிய ஹசந்த பெர்னாண்டோ 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நிமேஷ் பாக்ய 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய சம்பத் வங்கி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

அதிரடியாக விளையாடிய டினுக் விக்ரமநாயக்க ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் ப்ரமோஷ் பெரேரா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹற்றன் நெஷனல் வங்கி சார்பாக விமுக்தி பெரேரா 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம் 

ஹற்றன் நெஷனல் – 168/8 (20) 

மின்ஹாஜ் ஜலீல் 68, மாதவ  வர்ணபுர 34, ஹசந்த பெர்னாண்டோ 3/25, நிமேஷ் பாக்ய 2/29

சம்பத் வங்கி – 170/5 (19.2) 

தினுக் விக்கிரமநாயக்க 56 *, பிரமோஷ் பெரேரா 38, ஜீவன் மெண்டிஸ் 26, ஹசந்த பெர்னாண்டோ 22, விமுக்தி பெரேரா 2/23

போட்டி முடிவு – சம்பத் வங்கி 5 விக்கெட்டுகளால் வெற்றி


கொமர்ஷல் கிரெடிட் எதிர் மாஸ் எக்டிவ் 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொமர்ஷல் கிரெடிட் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய மாஸ் எக்டிவ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மாஸ் எக்டிவ் அணி சார்பாக உதார ஜயசுந்தர 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போதிலும் ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாக லஹிரு மதுஷங்க 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 145 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய கொமர்ஷல் கிரெடிட் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

கொமர்ஷல் கிரெடிட் அணி சார்பாக அஷான் ப்ரியஞ்சன் 54 ஓட்டங்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் டில்ஹான் குரே மற்றும் சதுரங்க டி சில்வா ஆட்டமிழக்காமல் முறையே 47, 25  ஓட்டங்களைப் பெற்றுகொண்டனர்.

போட்டியின் சுருக்கம் 

மாஸ் எக்டிவ் – 144/9 (20)

உதார ஜயசுந்தர 40, சசித் பத்திரண 33, டி எம் சம்பத் 33, லஹிரு மதுஷங்க 3/35, மலிந்த புஷ்பகுமார 2/12, அஷான் ப்ரியஞ்சன் 2/27

கொமர்ஷல் கிரெடிட் : 146/2 (18.2)

அஷான் ப்ரியஞ்சன் 54, டில்ஹான் குரே 47 *, சதுரங்க டி சில்வா 25 *

போட்டி முடிவு – கொமர்ஷல் கிரெடிட்  அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி.


ஜோன் கீல்ஸ் எதிர்  டீமோ

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டீமோ அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி களமிறங்கிய ஜோன் கீல்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. நிதானத்துடன் துடுப்பாடிய ஷானுக்க துலாஜ் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.

நிசல தருக தனது சிறப்பான பந்து வீச்சில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய டீமோ அணி 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்று நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. டீமோ அணி சார்பாக நிபுன் கருணாநாயக்க 44 ஓட்டங்களையும் ரமேஷ் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஜோன் கீல்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பாணுக ராஜபக்ஷ வீழ்த்தினார்.

போட்டி சுருக்கம் 

ஜோன் கீல்ஸ் – 117 (20)

ஷனுக்க டுலாஜ் 52, நிசல தருக 3/25, புலின தரங்கா 3/20, ஹஷான் ராமநாயக்க 2/25 

டீமோ – 119/6 (18.3)

நிபுன் கருணாநாயக்க 44, ரமேஷ் மெண்டிஸ் 39*, பாணுக ராஜபக்ஷ 2/9

போட்டி முடிவு – டீமோ அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.


டெக்ஸ்சர்ட் ஜேர்சி எதிர் மாஸ் யுனிச்செலா

குறிப்பிட்ட இந்தப் போட்டிக்கு டெக்ஸ்சர்ட் ஜேர்சி வருகை தராமையினால் போட்டி ”வோக் ஓவர்” செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாஸ் யுனிச்செலா இலகு வெற்றியினை பெற்றுக்கொண்டது.

அரையிறுதி போட்டிகள் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி நடைபெறும்.