Home Tamil சிங்கர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரின் சம்பியனாக புனித தோமியர் கல்லூரி

சிங்கர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரின் சம்பியனாக புனித தோமியர் கல்லூரி

187

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு, 19 வயதின் கீழான டிவிஷன் – I பாடசாலைகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் புனித தோமியர் கல்லூரி அணி, காலி றிச்மன்ட் கல்லூரி அணியினரை 12 ஓட்டங்களால் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி அணியினை தோற்கடித்த புனித தோமியர் கல்லூரி அணியும், மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியினை தோற்கடித்த காலி றிச்மன்ட் கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

>>கயான் சிறிசோமவின் அதிரடி பந்துவீச்சினால் காலி அணி இன்னிங்ஸ் வெற்றி

இதன் பின்னர் காலி சர்வதேச மைதானத்தில் தொடரின் இறுதிப் போட்டி இன்று (9) நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற காலி றிச்மன்ட் கல்லூரி அணியின் தலைவர் தவீஷ அபிஷேக், சித்தார ஹப்புகின்ன தலைமையிலான புனித தோமியர் கல்லூரி அணியினரை முதலில் துடுப்பாட பணித்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. புனித தோமியர் கல்லூரி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சலின் டி மெல் ஓட்டமேதுமின்றி ஆட்டமிழக்க, ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சித்தார ஹப்புகின்ன வெறும் 15 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார்.

எனினும், மத்திய வரிசையில் களம் வந்த யொஹான் பெரேரா, நிதானமான முறையில் துடுப்பாடி சதம் ஒன்றினை புனித தோமியர் கல்லூரி அணிக்காக பெற்றுக் கொடுத்தார். மொத்தமாக 132 பந்துகளினை எதிர்கொண்ட யொஹான் பெரேரா 14 பெளண்டரிகள் அடங்கலாக 124 ஓட்டங்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: Richmond College vs S. Thomas’ College | U19 Div I L/O Tournament – Final

அதேநேரம் யொஹான் பெரேராவுடன் புனித தோமியர் கல்லூரி அணிக்கு இன்னும் வலுச்சேர்க்கும் விதத்தில் றயான் பெர்னாந்துவும் 44 ஓட்டங்களை பெற்றுத்தந்தார்.

இந்த இரண்டு வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு புனித தோமியர் கல்லூரி அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 261 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

காலி றிச்மன்ட் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக அம்ஷி டி சில்வா மற்றும் சமாத் டில்சார ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 262 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய றிச்மன்ட் கல்லூரி அணி, ஆரம்பம் முதலே சிறப்பாக செயற்பட்டு வெற்றி இலக்கினை அடையும் தமது பயணத்தில் நல்ல நிலையிலேயே காணப்பட்டிருந்தது.

எனினும் தொடர்ந்து முன்னேறிய போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்த றிச்மன்ட் கல்லூரி அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவியது.

றிச்மன்ட் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஆதித்ய சிறிவர்த்தன அரைச்சதம் ஒன்றுடன் 53 ஓட்டங்களை பெற, பானுக்க மனோகர அரைச்சதம் ஒன்றினை பூர்த்தி செய்து 51 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம் இலங்கை கனிஷ்ட அணி வீரரான சந்துன் மெண்டிஸ் றிச்மன்ட் கல்லூரி அணிக்காக 49 ஓட்டங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

>>உலகக் கிண்ணத்தில் காலநிலை முக்கிய செல்வாக்கு செலுத்தும் –பீடர்சன்

இதேநேரம், புனித தோமியர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் தெவின் ஏரியகம மற்றும் கலன பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தனர்.

இப்போட்டியில் தோல்வியைத் தழுவியிருக்கும் றிச்மன்ட் கல்லூரி அணி, சிங்கர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நடப்பு சம்பியன் பட்டத்தினை புனித தோமியர் கல்லூரி அணியிடம் பறிகொடுக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஸ்கோர் விபரம்

Result


S. Thomas’ College
261/10 (49.4)

Richmond College
249/10 (49.1)

Batsmen R B 4s 6s SR
Sithara Hapuhinna c Vimud Sapnaka b Amshi Oren 15 16 3 0 93.75
Shalin De Mel lbw b Amshi Oren 0 2 0 0 0.00
Ryan Fernando c Vimud Sapnaka b Dilum Sudeera 44 86 6 0 51.16
Yohan Perera b Chamath Dilsara 124 132 14 0 93.94
Umayanga Suwaris c & b Dimuth Sadaruwan 10 18 1 0 55.56
Ravindu De Silva c Vinuja Kiriella b Dimuth Sadaruwan 21 18 3 0 116.67
Kishan Munasinghe lbw b Chamath Dilsara 4 7 0 0 57.14
Kalana Perera run out (Amshi Oren) 3 3 0 0 100.00
Dellon Peiris c Adithya Siriwardena b Amshi Oren 9 13 0 0 69.23
Thevin Bimsara Eriyagama lbw b Chamath Dilsara 0 1 0 0 0.00
Shannon Fernando not out 0 2 0 0 0.00


Extras 31 (b 3 , lb 1 , nb 0, w 27, pen 0)
Total 261/10 (49.4 Overs, RR: 5.26)
Bowling O M R W Econ
Kavindu Hansika Edirweera 5 0 22 0 4.40
Amshi Oren 9.4 0 58 3 6.17
Chamath Dilsara 7 0 49 3 7.00
Dilum Sudeera 10 1 23 1 2.30
Sandun Mendis 10 0 49 0 4.90
Dimuth Sadaruwan 8 0 56 2 7.00


Batsmen R B 4s 6s SR
Vinuja Kiriella c Shalin De Mel b Yohan Perera 15 29 2 0 51.72
Adithya Siriwardena run out (Kalana Perera) 53 87 5 0 60.92
Thaveesha Abhishek c Yohan Perera b Thevin Bimsara Eriyagama 7 12 1 0 58.33
Bhanuka Manohara c Kishan Munasinghe b Shannon Fernando 51 76 5 1 67.11
Sandun Mendis c Ryan Fernando b Kalana Perera 49 32 10 0 153.12
Dilum Sudeera c Kalana Perera b Shannon Fernando 6 8 0 0 75.00
Vimud Sapnaka c Sithara Hapuhinna b Kalana Perera 12 14 0 0 85.71
Dimuth Sadaruwan run out (Shalin De Mel) 13 12 1 0 108.33
Amshi Oren not out 3 16 0 0 18.75
Chamath Dilsara b Shannon Fernando 4 4 0 0 100.00
Kavindu Hansika Edirweera c Shannon Fernando b Thevin Bimsara Eriyagama 5 9 0 0 55.56


Extras 31 (b 9 , lb 3 , nb 4, w 15, pen 0)
Total 249/10 (49.1 Overs, RR: 5.06)
Bowling O M R W Econ
Kalana Perera 10 0 39 2 3.90
Yohan Perera 7 0 35 1 5.00
Thevin Bimsara Eriyagama 8.1 0 46 2 5.68
Dellon Peiris 8 0 48 0 6.00
Kishan Munasinghe 6 0 25 0 4.17
Shannon Fernando 10 0 44 1 4.40



முடிவு – புனித தோமியர் கல்லூரி அணி 12 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<