அசெல் சிகேரா 10 விக்கெட்டுகள்; ஆனந்த கல்லூரிக்கு இலகு வெற்றி

192

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான டிவிஷன் 1 கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகள் இன்று நிறைவடைந்தன.

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை எதிர் மொரட்டு மகா வித்தியாலயம், மொரட்டுவை

பண்டாரவத்த பலபிடிய  மைதானத்தில் நேற்று  (27) ஆரம்பமான இப்போட்டியில் தர்மாசோக கல்லூரி 210 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மொரட்டு மகா வித்தியாலயம் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தர்மாசோக கல்லூரிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தர்மாசோக கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 67.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மொரட்டு மகா வித்தியாலயம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த தர்மாசோக கல்லூரி 8 விக்கெட்டுகளுக்கு 174 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

255 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மொரட்டு மகா வித்தியாலயம் 44 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை (முதலாவது இன்னிங்ஸ்) – 214 (67.5) – கவிந்து நதீஷான் 54, ரசாந்த டி சில்வா 39, விராஜ் கனிஷ்க 3/16, ஷெஹான் ஜீவந்த 3/10

மொரட்டு மகா வித்தியாலயம், மொரட்டுவை (முதலாவது இன்னிங்ஸ்) – 134 (39.5) – ஷெஹான் ஜீவந்த 40*, ஜனித் செவுமித் 25, கவிந்து நதீஷான் 5/54, நிமேஷ் மென்டிஸ் 3/30  

தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 174/8d (39) – சச்சின் சங்கீத் 40, நிமேஷ் மென்டிஸ் 42, ஷெஹாத நிஜேந்திர 3/21

மொரட்டு மகா வித்தியாலயம், மொரட்டுவை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 44 (21.2) – கவிந்து நதீஷான் 4/14,  நிமேஷ் மென்டிஸ் 2/22

முடிவு – தர்மாசோக கல்லூரி 210 ஓட்டங்களால் வெற்றி.


புனித சேவார்டியஸ் கல்லூரி, மாத்தறை எதிர் வெஸ்லி கல்லூரி, கொழும்பு

வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நேற்று  ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் முதல் இன்னின்ங்ஸ் அடிப்படையில் புனித சேவார்டியஸ் கல்லூரி புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்லி கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித சேவார்டியஸ் கல்லூரிக்கு வழங்கியது.  இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித சேவார்டிஸ் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 76.4 ஓவர்களில்  சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஜனுஷ்க பெர்னாண்டோவின் அபாரப் பந்துவீச்சினால் தர்ஸ்டன் கல்லூரிக்கு இலகு வெற்றி

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெஸ்லி கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த சேவார்டியஸ் கல்லூரி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த வெஸ்லி கல்லூரி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

புனித சேவார்டியஸ் கல்லூரி, மாத்தறை (முதலாவது இன்னிங்ஸ்) – 169 (76.4) – சுபுன் கவிந்த 44, சகுந்த லியனகே 4/30, மொவின் சுபசிங்ஹ 3/38

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 75 (37) – திலான் பிரஷான் 4/18,  சரித் ஹர்ஷன 3/08.

புனித சேவார்டியஸ் கல்லூரி, மாத்தறை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 164/6d (26) – சுபுன் கவிந்த 37, கேஷர நிவந்த 30, திலான் ப்ரஷான் 25*, மொவின் சுபசிங்ஹ 4/101

வெஸ்லி கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 135/6 (50) – ஷெனால் தங்கல்ல 47*, சகுந்த லியனகே 20*, மொவின் சுபசிங்ஹ 24, சசிக துல்ஷான் 3/47

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. புனித சேவார்டியஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.


புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகலை   

தோமியர் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் புனித தோமியர் கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மலியதேவ கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை புனித தோமியர் கல்லூரிக்கு வழங்கியது.  இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித தோமியர் கல்லூரி தமது முதல் இன்னிங்சுக்காக 62.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து பொலொவ் ஓன் (Follow on) முறைக்கு தள்ளப்பட்ட மலியதேவ கல்லூரி 198 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

60 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய புனித தோமியர் கல்லூரி 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணி சார்பில் துமித் குணரத்ன 26 ஓட்டங்களைப் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதலாவது இன்னிங்ஸ்) – 225/9d (62.4) – டெலோன் பீரிஸ் 40, துலாஜ் ரணதுங்க 66/4

மலியதேவ கல்லூரி, குருநாகலை (முதலாவது இன்னிங்ஸ்) – 81 (30.5) – துலாஜ் ரணதுங்க 30, ஷெனொன் பெர்னாண்டோ 3/03, டெல்லோன் பீரிஸ் 3/12

மலியதேவ கல்லூரி, குருநாகலை (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 198 (68.3) – சாளுக அட்டபத்து 47, கவீன் பண்டார 38, டெல்லோன் பீரிஸ் 6/48

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 60/1 (10.2) – துமித் குணரத்ன 26

முடிவு – புனித தோமியர் கல்லூரி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது


ரோயல் கல்லூரி, கொழும்பு எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி

ரோயல் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டி சமநிலையில் முடிவுற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரிச்மண்ட் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை ரோயல் கல்லூரிக்கு வழங்க, அவ்வணி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரிச்மண்ட் கல்லூரி 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

15 வயதுக்குட்பட்ட மாகாண கிரிக்கெட் சம்பியனாக மேல்மாகாண மத்திய பிராந்தியம்

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த ரோயல் கல்லூரி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்ற வேளை போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

ரோயல் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 223 (81) – கவிந்து மதரசிங்க்ஹ 72, பாக்ய திசாநாயக்க 63, தவீஷ அபிஷேக் 4/22, சதுன் மென்டிஸ் 2/64

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதலாவது இன்னிங்ஸ்) – 165/9d (51.2) – அவிந்து தீக்ஷன 57, வினுஜ கிரியெல்ல 26, தருஷ ருக்ஷான் 3/25, கமில் மிஷார 3/49, லஹிரு மதுஷங்க  2/15   

ரோயல் கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 196/4 (53.2) – கமில் மிஷார 88, கயான் திசாநாயக 60, பாக்ய திசாநாயக 24, தவீஷ அபிஷேக் 3/50

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது.


ஆனந்த கல்லூரி, கொழும்பு எதிர் ஸாஹிரா கல்லூரி, மருதானை

ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் ஆனந்த கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸாஹிரா கல்லூரி 99 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து பொலோ ஓன் முறைக்கு தள்ளப்பட்ட ஸாஹிரா கல்லூரி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

46 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆனந்த கல்லூரி 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.          

போட்டியின் சுருக்கம்

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 235 (50.4) – காமேஷ் நிர்மல் 46, கனிஷ்க ரன்டிலககே 41, கலன விஜேசிறி 31, முஹமத் ஆதில் 5/67, முஹம்மத் சக்கி 2/27

ஸாஹிரா கல்லூரி, மருதானை (முதலாவது இன்னிங்ஸ்) – 99 (38.4) – ரித்மிக நிமேஷ் 51*, அசெல் சிகேரா 3/23, சனத் தசநாயக 2/18, லக்ஷித அமரசேகர 2/28

ஸாஹிரா கல்லூரி, மருதானை (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 181 (54.2) – முஹமத் ரிபாத் 42, முஹமத் சக்கி 38, முஹம்மத் சஹாதுல்லாஹ் 27, ரித்மிக நிமேஷ் 25, அசெல் சிகேரா 7/46, களன விஜேசிறி 2/15

ஆனந்த கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 46/2 (10.3) – கவிந்து கிம்ஹான் 21, முஹமத் ஆதில் 2/29

முடிவு – ஆனந்த கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி