உலகக்கிண்ணத் தொடரின் இந்திய அணியின் முதல் போட்டியில் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுப்மான் கில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சுப்மான் கில் ஐசிசியின் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
>> உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியின் சாதனைத் துளிகள்
இவர் அணியின் துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்துவந்த போதும், அவருக்கு டெங்கு நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக அணியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியை தவறவிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சுப்மான் கில்லின் டெங்கு நோய் தொற்று தொடர்பிலான முழு விபரமும், அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகவில்லை.
எனவே சுப்மான் கில் முதல் போட்டியிலிருந்து வௌியேறும் அதேநேரம், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்பது தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
முதல் போட்டியிலிருந்து சுப்மான் கில் நீக்கப்பட்டால், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இசான் கிஷான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<