நியூசிலாந்து தொடரிலிருந்து நீக்கப்படும் சிரேயாஸ் ஐயர்!

New Zealand tour of India 2023

315

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய குழாத்திலிருந்து துடுப்பாட்ட வீரர் சிரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புதன்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது.

விபத்தின் பின்னர் ரிஷாப் பாண்ட் வெளியிட்ட முதல் அறிக்கை

இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றிருந்த சிரேயாஸ் ஐயருக்கு முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சிரேயாஸ் ஐயர் இறுதியாக இலங்கை அணிக்கு எதிரான ஒநருநாள் தொடரில் விளையாடியிருந்தார்.

தற்போது உபாதைக்குள்ளாகிய சிரேயாஸ் ஐயர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர் தேசிய கிரிக்கெட் அகடமியுடன் இணைந்து உபாதைக்கான சிகிச்சை முகாமைத்துவத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சிரேயாஸ் ஐயர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் ரஜத் பட்டிதார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார் ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய குழாத்துடன் இணைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஒருநாள் குழாம்

ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோஹ்லி, ரஜத் பட்டிதார், சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பாரத், ஹர்திக் பாண்டியா, வொசிங்டன் சுந்தர், சபாஷ் அஹ்மட், சர்துல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், உம்ரான் மலிக்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<