இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
சிக்கண்டர் ரஷாவுக்கு அபராதம் விதித்த ஐசிசி
முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றுவரும் நிலையில், பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இவர் பந்துவீசியிருந்த போதும், நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் துடுப்பெடுத்தாடும் போது, இவருடைய கைவிரல் பகுதியில் பந்து தாக்கியிருந்தது. குறித்த உபாதை காரணமாக அவர், ஆட்டமிழக்கும் முன்னர் களத்திலிருந்து வெளியேறியதுடன், பங்களாதேஷ் அணியின் இன்னிங்ஸும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த உபாதை குறித்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில், சொரிபுல் இஸ்லாமின் கைவிரல் பகுதியில் (மணிக்கட்டு) எழும்பு முறிவு ஏற்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது. இதன்காரணமாக ஐந்தாவது நாளான இன்று அவர் போட்டியில் பங்கேற்கவில்லை.
அதேநேரம், சொரிபுல் இஸ்லாமின் உபாதை குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள தகவலில், அவரால் எதிர்வரும் 2 வாரங்களுக்கு போட்டிகளில விளையாட முடியாது எனவும், அதுவரையில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சொரிபுல் இஸ்லாம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனவும், முழுமையான தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில், சொரிபுல் இஸ்லாமிற்கு பதிலாக புதிய வீரர்கள் இணைக்கப்படமாட்டார் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<