ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் இடம்பெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில், வேகப் பந்துவீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோ மேலதிக வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.
ஷிரான் பெர்னாண்டோ இதுவரையில் இலங்கை அணிக்காக அறிமுகமாகாத போதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சென்றுள்ளார்.
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் ஓமான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் T20 போட்டியின் போது, உபாதைக்கு முகங்கொடுத்தார். இதன் காரணமாக ஷிரான் பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நுவான் பிரதீப் தொடரிலிருந்து முழுமையாக நீக்கப்படவில்லை என்ற தகவல்கள் எமது இணையத்தளத்துக்கு கிடைத்துள்ளது. நுவான் பிரதீப் உபாதையிலிருந்து மீண்டுவருவதாகவும், அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணி, தங்களுடைய முதல் போட்டியில், நமீபியா அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப்போட்டி நாளை மறுதினம் (18) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<