IPLல் இல் புது வரலாறு படைத்தார் தவான்!

241
BCCI

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்ததுடன், 5,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளார் ஷிகர் தவான்.

ஐபிஎல் தொடரில் நேற்று (20) நடைபெற்ற 38ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கெபிடல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களைக் குவித்தது

விராட் கோஹ்லியின் சாதனையை தட்டிப்பறித்த டேவிட் வோர்னர்

இதில் ஷிகர் தவான் மட்டும் 12 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் உட்பட 106 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத்தார். இதன்மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை தவான் படைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக இறுதியாக நடைபெற்ற லீக் ஆட்டத்திலும் அவர் சதமடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 

அத்துடன், இம்முறை .பி.எல் தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். இதுவரை .பி.எல் தொடரில் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் எந்த வீரரும் சதம் அடித்ததில்லை

இதன்படி, தொடர்ந்து இரண்டு .பி.எல் போட்டிகளில் சதம் அடித்து வரலாறு படைத்த ஷிகர் தவான், ஒரே .பி.எல் பருவத்தில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவதாக இணைந்தார்.  

இந்தப் பட்டியலில் விராத் கோஹ்லி (4 சதங்கள், 2016), கிறிஸ் கெயில் (2 சதங்கள் 2011), ஹசீம் அம்லா (2 சதங்கள் 2017), ஷேன் வொட்சன் (2 சதங்கள் 2018) ஆகிய வீரர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

அதேபோல, ஒரு .பி.எல் தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் அடிக்கும் 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையும் ஷிகர் தவான் பெற்றுக் கொண்டார். ஒரு .பி.எல் தொடரில் 4 சதங்களை விராட் கோஹ்லி விளாசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video – LPL ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்..! முழுமையான பார்வை | Sports Round-up – Epi 136

மேலும், இந்தப் போட்டியின் போது .பி.எல் தொடரில் 5,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார் தவான். முன்னதாக விராட் கோஹ்லி (5759), சுரேஷ் ரெய்னா (5368), ரோஹித் சர்மா (5158), டேவிட் வோர்னர் (5037) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டி உள்ளனர். இந்த மைல்கல்லை எட்டும் ஐந்தாவது வீரராக ஷிகர் தவான் இடம்பிடித்தார்

இந்த பருவத்தில் முதலில் பெரியளவில் பிரகாசிக்கத் தவறிய தவான், டெல்லி அணியின் 7ஆவது லீக் ஆட்டமான மும்பைக்கு எதிராக முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.  

அதன்பிறகு, 57, 101, தற்போது 106 என மிகப் பெரிய ஓட்டங்களைக் குவித்து வருகிறார். இதன்மூலம், நடப்பு ஐபிஎல் பருவத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் ஷிகர் தவான் 2-வது இடத்தில் உள்ளார்

எனினும், பஞ்சாப் அணிக்கெதிராக ஷிகர் தவான் சதம் அடித்தும், டெல்லி கெபிடல்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<