பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிராக சில்ஹெட்டில் பெப்ரவரி 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் உபாதைக்கு உள்ளான ஷெஹான் மதுஷங்க, வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் சுதந்திர கிண்ண T20 தொடரில் விளையாடுவது சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ளது.
[rev_slider LOLC]
பங்களாதேஷுக்கு எதிரான முதல் T20 இல் தனது கன்னி T20 போட்டியில் ஆடிய மதுஷங்க அந்தப் போட்டியில் திறமையை வெளிக்காட்ட முடியாமல்போனபோதும், இரண்டாவது T20 போட்டியில் பாதியில் வெளியேறும் முன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மதுஷங்க தனது மூன்றாவது ஓவரின் பாதியில் பின்தொடை பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக வெளியேறினார்.
வீரர்களின் திறமைக்குதான் வெற்றி கிடைத்தது என்கிறார் ஹத்துருசிங்க
இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷில் பெற்றுக்கொண்ட தொடர் வெற்றியானது தனது திறமையை காட்டிலும் அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வீரர்களினதும்
அவரது காயத்தின் அளவை MRI ஸ்கேன் சோதனை முடிவுகள் மூலம் மாத்திரமே உறுதியாக கூற முடியும் என்று இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் எதிர்வரும் சுதந்திர கிண்ண T20 முத்தரப்பு தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.
எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பமாகும் இந்த சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
லீக் மட்ட போட்டிகளில் ஒரு அணி ஏனைய அணிகளுடன் இரு தடவைகள் மோதவுள்ளன. இதில் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் 18ஆம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் மோதும்.