இலங்கை கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கும் செஹான் ஜயசூரிய!

3396

இலங்கை தேசிய அணியில் விளையாடிய, சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் செஹான் ஜயசூரிய, இனிவரும் காலங்களில் இலங்கை தேசிய அணிக்கான போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார்.

செஹான் ஜயசூரிய இலங்கை ஒருநாள் மற்றும் T20I அணிகளில் இணைக்கப்பட்டு விளையாடிவந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு குடிபெயரவுள்ளதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

Read :  அகில தனன்ஞயவிற்கு பந்துவீச அனுமதியளித்த ஐ.சி.சி.

இதன்காரணமாக செஹான் ஜயசூரிய இனிவரும் காலங்களில், உடன் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை தேசிய மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையும் அறிவித்துள்ளது.

சொஹான் ஜயசூரிய, அவரது குடும்பத்துடன், அமெரிக்காவுக்கு சென்று குடியேற உள்ளதால், இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், தான் விளையாடுவதற்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்த, இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தேசிய அணியின் வீரராக, இலங்கை அணிக்கு பங்களிப்பை வழங்கிய செஹான் ஜெயசூரியவுக்கு நன்றிகளை தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, அவரது எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

செஹான் ஜயசூரிய இலங்கை தேசிய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 18 T20I போட்டிகளில் விளையாடிவுள்ளதுடன் முறையே 191 மற்றும் 241 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், ஒட்டுமொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை முதற்தர போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்துள்ள இவர், 80 போட்டிகளில் விளையாடி 42.10 என்ற ஓட்ட சராசரியில் 6604 ஓட்டங்களையும், 193 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க