ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக, அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஷோன் டைட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷோன் டைட், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையை, அந்த கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளதுடன், எதிர்வரும் தொடர்களுக்கு அவர் அணியுடன் இணைந்துக்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
IPL ஆடுவது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் வனிந்து ஹஸரங்க
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷோன் டைட், அதிவேகமாக பந்துவீசக்கூடிய திறமையை கொண்டவர். அவரது பந்துவீச்சு பாணி மற்றும் வேகம் என்பன அவரின் விளையாடும் காலங்களில் அனைவராலும் அதிகம் பேசப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், கடந்த 2017ம் ஆண்டு சர்வசே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடன் இணைந்து பணிபுரியவுள்ளார்.
ஷோன் டைட், பிக் பேஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனகட்ஸஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளதுடன், அபுதாபி T10 தொடரில் பங்ளா டைகர்ஸ் மற்றும் றோயல் லண்டன் ஒருநாள் தொடரில் டர்ஹாம் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியானது, இலங்கையில் வைத்து, ஐசிசி சுப்பர் லீக்குக்கான ஒருநாள் தொடரில், பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. அத்துடன், நவம்பர் மாதத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஒக்டோபரில் ஐசிசி T20 உலகக் கிண்ணம் போன்ற தொடர்களில் விளையாடவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<