லங்கன் அணிக்கு வலுச்சேர்த்த சஷின், லக்‌ஷானின் சதம்

171

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் 6 ஆவது வாரத்துக்கான நான்கு போட்டிகள் இன்று (19) ஆரம்பமாகின.

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர சபை விளையாட்டுக் கழகம்

சஷின் பெர்ணாந்து மற்றும் லக்‌ஷான் ரொட்ரிகோவின் அபார சதத்தின் உதவியால் லங்கன் கிரிக்கெட் கழகம் களுத்துறை நகர சபை அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

மக்கொன சர்ரே மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லங்கன் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய லங்கன் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சஷின் பெர்ணாந்து மற்றும் லக்‌ஷான் ரொட்ரிகோ ஜோடி முதல் விக்கெட்டுக்காக 187 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தைப் பெற்றுக்கொடுத்து சதங்களையும் பதிவு செய்தனர்.

அஷேன், சச்சித்ரவின் சதத்தால் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு இமாலய ஓட்டங்கள்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளூர்…

இதில் 181 பந்துகளுக்கு முகங்கொடுத்த சஷின் பெர்ணாந்து 3 சிக்சர்கள், 17 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 122 ஓட்டங்களுடன் தனது முதலாவது முதல்தர சதத்தைப் பதிவு செய்ததுடன், 75 பந்துகளுக்கு முகங்கொடுத்த லக்‌ஷான் ரொட்ரிகோ ஒரு சிக்ஸர், 21 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 121 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இன்றைய நாள் முடிவில் அவ்வணி 4 விக்கெட்டுக்களை இழந்து 420 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

களுத்துறை அணி 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியிருந்தாலும், அவ்வணி சார்பாக ரவிந்து திலகரத்ன மாத்திரம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 420/4 (90) – சஷின் பெர்ணாந்து 122, லக்‌ஷான் ரொட்ரிகோ 121, கீத் குமார 69*, துசிர மதநாயக்க 60*, ரவிந்து திலகரத்ன 2/120


பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

பொலிஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த நிமேஷ் விமுக்தி மற்றும் கல்யாண ரத்னப்பிரிய ஆகியோரின் அபார பந்துவீச்சினால் நீர்கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் பொலிஸ் அணி முன்னிலை பெற்றது.

கதிரான கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பொலிஸ் அணி, நீர்கொழும்பு அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய நீர்கொழும்பு அணி, பொலிஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

எனினும், அவ்வணிக்காக அபாரமாக விளையாடிய அணித்தலைவர் உமேக சதுரங்க ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

விஷ்வ சதுரங்கவின் சதத்தினால் வலுவடைந்துள்ள பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட டிவிஷன்…

இதன்போது பொலிஸ் அணி சார்பில் நிமேஷ் விமுக்தி மற்றும் கல்யாண ரத்னப்பிரிய ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

அதன்பிறகு முதல் நாளில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பொலிஸ் விளையாட்டுக் கழகம், இன்றைய ஆட்ட நேர முடிவின்போது 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 178 (63.3) – உமேக சதுரங்க 56*, லசித் குரூஸ்புள்ளே 22, அகீல் இன்ஹாம் 22, நிமேஷ் விமுக்தி 5/66, கல்யாண ரத்னப்பிரிய 5/79

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 71/4 (34) – தினூஷ பெர்ணாந்து 30*, ஷெஹான் வீரசிங்க 2/15


குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்க விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குருநாகல் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய குருநாகல் யூத் கிரிக்கெட் அணி, இன்றைய நாள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக தரிந்து தசநாயக்க 170 பந்துகளுக்கு முகங்கொடுத்து 63 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் விமானப்படை அணி சார்பாக ஹஷான் ஜேம்ஸ், மிலான் ப்ரியனாத் மற்றும் லக்‌ஷான் பெர்னாந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் யூத் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 267/8 (90) – தரிந்து தசநாயக்க 63, ஹசான் பிரபாத் 48*, சரித் மெண்டிஸ் 40, ஹஷான் ஜேம்ஸ் 2/21, மிலான் ப்ரியனாத் 2/55, லக்‌ஷான் பெர்னாந்து 2/68


காலி கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற காலி அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இளையோர் உலகக் கிண்ணத்திலிருந்து இலங்கை அணி வெளியேற்றம்

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தா…

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய காலி அணி, தமது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பாணந்துறை அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் காலி அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது. எனினும் அவ்வணிக்காக நிதானமாக விளையாடிய அசந்த பெர்னாந்து, 87 பந்துகளுக்கு முகங்கொடுத்து 7 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த பாணந்துறை அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 217 (62.1) – அசந்த பெர்னாந்து 55, சரித புத்திக 42, கயான் சிறிசோம 30, மொஹமட் ரமீஸ் 2/31, சமிந்திர மதுஷன் 2/43, வினோத் பெரேரா 4/44

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 57/2 (24) – அஷேன் கவிந்த 37