சர்வதேச கிரிக்கெட் சபை தலைவர் சஷாங் மனோகர் திடிர் ராஜினாமா!

275

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சஷாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் சபை தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தமது தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகியதாக மேலும் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு மே மாதம் பிசிசிஐ  (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) யிலிருந்து வெளியேறியதன் பின்னர், சர்வதேச கிரிக்கெட் சபையின் முதலாவது சுயாதீன தலைவராக இரண்டு வருடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் அவர்களுக்கு தமது தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் தொடர்ந்தும் தலைவர் பதவியில் நீடித்திருப்பதற்கு இயலாமையை அறிவித்திருந்தார். குறித்த பதவி விலகலுக்குமைய தலைவர் பதவியில் எட்டு மாதங்களுக்கு மாத்திரமே நீடித்திருந்தார்.

சஷாங் மனோகர், , சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சர்வதேச கிரிக்கெட் சபையின் திர்மானம் மிக்க தருணங்களில் மற்றும் செயல்பாடுகளில் சபையின் அங்கத்தவர்கள் மற்றும் அனைத்து மேலாளர்களின் ஆதரவுடன் என்னால் முடிந்தளவு நேர்மையாகவும், பக்க சார்பின்றியும் செயல்பட முயற்சி செய்து வந்தேன்.

எனினும், ஒருசில தனிப்பட்ட  காரணங்களால் குறித்த காலம் வரை பதவியில் நீடித்திருக்க இயலமாயையினால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எனது தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இத்தால் தெரிவிக்கின்றேன். மேலும், இந்த சந்தர்ப்பத்தில், முழு மனதோடு எனக்கு ஆதரவு அளித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழியர்கள், முகாமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

அத்துடன், எதிர்காலத்தில் சரவதேச கிரிக்கெட் சபை மேம்மேலும் சிறப்புற வாழ்த்துகின்றேன்’’ என்று சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்னுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.  

தமது பதவி காலத்தில், நியமப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச கிரிக்கெட் சபையின் வருமான பகிர்வு குறித்த உத்தேச சீர்திருத்தங்களை உருவாக்குவதில் முன்னின்றார். எனினும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் குறித்த உத்தேச சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் வேண்டுமென்ற நிலையில் குறித்த நெருக்கடியான சூழ்நிலையை தவிர்க்கும் வகையில்  சஷாங் மனோகர் பதவி பதவி விலகியுள்ளார்.

மேற்குறித்த வருமான பகிர்வு குறித்த உத்தேச சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்ட போது முதலில் இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்த்தது. அதனையடுத்து  இலங்கை மற்றும் ஜிம்பாவே கிரிக்கெட் சபைகளினால் எதிர்ப்பு தெரிவிக்கபட்டிருந்தது.

அத்துடன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ராகுல் ஜோஹ்ரி தன் பக்கம் இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய வாரியங்களை இழுத்துள்ளதால் சர்வதேச கிரிக்கெட் சபையின்,  எந்த ஒரு நிதிசார் சீர்த்திருத்தங்களுக்கும் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும் என்ற விதிமுறையின்படி குறித்த நாடுகள் எதிர்த்து வாக்காளித்தால் சீர்த்திருத்தங்கள் நடைமுறைபடுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது

அதே நேரம் சர்வதேச கிரிக்கெட் சபை, தலைவர்  சஷாங் மனோகர் மின்னஞ்சல் முலமாக  அனுப்பியுள்ள தமது ராஜினாமா குறித்த கடிதம் கிடைக்கபெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது. அத்துடன், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு முன்னர் குறித்த நிலைமை குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.