இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியுடன் வேகப்பந்து சகலதுறை வீரரான ஷர்துல் தாக்கூர் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>இலங்கை – பங்களாதேஷ் இளையோர் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம்!<<
ஷர்துல் தாக்கூர் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியில் உபாதைக்குள்ளான மொஹ்சின் கானின் பிரதியீட்டு வீரராகவே, லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
ஷர்துல் தாக்கூர் இந்தப் பருவத்திற்கான IPL ஏலத்தில் எந்த அணிகள் மூலமும் கொள்வனவு செய்யப்படாத நிலையில், தற்போது பிரதியீட்டு வீரராக இந்திய நாணயப்படி 2 கோடி ரூபாய்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக 95 IPL போட்டிகளில் ஆடியுள்ள தாக்கூர் 94 விக்கெட்டுக்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<