சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் மே.தீவுகள் வீரர்!

West Indies Cricket

2
Shannon Gabriel

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷெனோன் கேப்ரியல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஷெனோன் கேப்ரியல் கடந்த 2012ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அறிமுகமாகியதுடன், மொத்தமாக 86 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

>>சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்<<

டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக மேற்கிந்திய தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள ஷெனோன் கேப்ரியல் மொத்தமாக 59 போட்டிகளில் விளையாடி ஒரு 10 விக்கெட் மற்றும் 6 ஐந்து விக்கெட் பிரதியென 166 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இதில் இலங்கை அணிக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய அதிசிறந்த பந்துவீச்சையும் பதிவுசெய்திருந்தார்.

அதேநேரம் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளையும், 2 T20I போட்டிகளில் மாத்திரம் விளையாடி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஷெனோன் கேப்ரியல் இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<