தலைமை பயிற்றுவிப்பாளராகும் ஷேன் வொட்சன்!

Major League Cricket 2023

187

அமெரிக்காவில் முதன்முறையாக நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) T20 தொடரில் சென் பிரான்சிஸ்கோ யுனிகோர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஷேன் வொட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் சகலதுறை வீரரான ஷேன் வொட்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதிலிருந்து கிரிக்கெட் வர்னணையாளர் மற்றும் சர்வதேச மட்டத்தில் நடைபெறும் லீக் போட்டிகளில் அணிகளின் பயிற்றுவிப்பு குழாத்தில் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.

அமெரிக்காவில் மீண்டும் ஒன்றுகூடும் CSK நட்சத்திரங்கள்!

இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற IPL தொடரில் ரிக்கி பொண்டிங் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டெல்லி கெபிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக ஷேன் வொட்சன் செயற்பட்டு வந்தார்.

இவ்வாறான நிலையில் சென் பிரான்சிஸ்கோ யுனிகோர்ன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, முதன்முறையாக அணியொன்றின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஷேன் வொட்சன் இந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் செயற்படவுள்ளார்.

சென் பிரான்சிஸ்கோ யுனிகோர்ன்ஸ் அணியை பொருத்தவரை சர்வதேச நட்சத்திரங்களான அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், மார்கஸ் ஸ்டொயினிஸ், தென்னாபிரிக்காவின் லுங்கி என்கிடி, இங்கிலாந்தின் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் நியூசிலாந்தின் கோரி எண்டர்சன் போன்ற வீரர்கள இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<