ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசராக ஷேன் வோர்ன்

194
Shane Warne

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வோர்ன், இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராகவும், விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் 

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஷேன் வோர்ன். .பி.எல் இன் அறிமுகம் தொடரில் இவரது தலைமையில்தான் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இவர் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வருடமும் மீண்டும் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

>> LPL தொடரில் வசீம் அக்ரம், சொஹைப் அக்தர், லாராவுக்கு முக்கிய பதவி

இதுகுறித்து ஷேன் வோர்ன் கூறுகையில், இரண்டு பணியுடன் மீண்டும் ராஜஸ்தான் ரோயல்ஸ், என்னுடைய அணி, என்னுடைய குடும்பத்திற்கு திரும்பியதை சிறந்த உணர்வாக கருதுகிறேன். அனைத்து விடயங்களிலும் அணியுடன் இணைந்து வேலை செய்வது உற்சாகமாக உள்ளது. அதை நான் விரும்புகிறேன். 

உலகளாவிய அணி என்ற திட்டத்தை நோக்கி நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம். உலகம் முழுவதிலும் இருந்த ரசிகர்கள் விரும்ப வேண்டும். எங்களை பின் தொடர வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம். இந்த பருவத்தில் அணி ஆலோசகராக பணியாற்ற இருக்கிறேன்

எங்களால் இந்த முறை வெற்றிகரமான தொடராக முடிக்க முடியுயும் என நம்புகிறோம். எதிர்வரும் மாதங்களில் சாதனைப் படைப்பது பெரிய கனவாக இருக்கும்” என தெரிவித்தார்

இதேவேளை, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, செப்டம்பர் 22ஆம் திகதி தன் முதல் லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<