அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் நட்சத்திரமான ஷேன் வோர்னின் தனிப்பட்ட இறுதி மரண ஊர்வலம் (Private Funeral) கடந்த சனிக்கிழமை (19) மெல்பர்பனில் நடைபெற்று முடிந்திருக்கின்றது.
>> “பெங்களூர் ஆடுகளம் சராசரிக்கும் குறைவானது” – ஐசிசி அறிவிப்பு
ஷேன் வோர்ன் கடந்த 04ஆம் திகதி தாய்லாந்தில் வைத்து தன்னுடைய 52ஆவது வயதில் மரணமடைந்திருந்தார். தொடர்ந்து தாய்லாந்தில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு கொண்டு வரப்பட்ட வோர்னின் பூதவுடல், தனிப்பட்ட மரண ஊர்வலத்திற்காக மெல்பர்னில் காணப்படுகின்ற சென். கில்டா கால்பந்து அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த மரண ஊர்வலத்தில் ஷேன் வோர்னின் மூன்று பிள்ளைகள் அடங்கலாக குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்திருந்ததோடு, 80 பேர் வரையில் ஷேன் வோர்னிற்கு தங்களது இறுதி மரியாதைகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> ராவல்பிண்டியிலிருந்து லாஹூரிற்கு போட்டிகளை மாற்றிய பாகிஸ்தான்
இந்த இறுதி ஊர்வலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான மைக்கல் கிளார்க், அல்லன் போர்டர், வோர்னின் சக அணி வீரர் கிளன் மெக்ராத் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வோகன் ஆகியோரும் வோர்னிற்கு தங்களது அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.
இதேநேரம் ஷேன் வோர்னின் இறுதி மரண ஊர்வலம் (State Funeral) எதிர்வரும் 30ஆம் திகதி மெல்பர்ன் கிரிக்கெட் அரங்கில் வைத்து நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<