இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான மொஹமட் சமி தசை தொடர்பிலான சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
>> புதிய பயிற்சி மற்றும் கல்வி நிகழ்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தும் ICC
தசை உபாதை காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் மொஹமட் சமி விளையாடாது போயிருந்தார். இந்த நிலையில் மொஹமட் சமிக்கு ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இருந்து ஏற்பட்டிருந்த குறிப்பிட்ட தசை உபாதைக்கே தற்போது சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
மொஹமட் சமி தனக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விடயத்தினை தனது சமூக வலைதள கணக்கு வாயிலாக உறுதிப்படுத்தியிருப்பதோடு, தான் விரைவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் மொஹமட் சமியின் சத்திரசிகிச்சை காயங்கள் குணமாக சில நாட்கள் செல்லும் என்பதனால் அவர் 2024ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் ஆட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பின்னர் நடைபெறவிருக்கும் T20I உலகக் கிண்ணத் தொடரில் அவர் விளையாடுவதும் சந்தேகமாகியிருக்கின்றது. மொஹமட் சமி IPL தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>> WATCH – இங்கிலாந்து அணிக்கு பாடம் புகட்டும் இந்திய அணி! | Sports Field
அதேவேளை மொஹமட் சமியின் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதோடு குறிப்பிட்ட தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரினை 3-1 எனக் கைப்பற்றியிருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<