பார்வைக்கோளாறுக்கு மத்தியிலும் சகீப்பிற்கு கிரிக்கெட் விளையாட அனுமதி

220
Shakib to take conventional route

பார்வை கோளாறு ஒன்றுக்கு முகம் கொடுத்திருக்கும் சகீப் அல் ஹசனிற்கு தொடர்ந்தும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.  

>> அதிரடி வெற்றிகளுடன் முன்னேறும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் தற்போது ரங்ப்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வரும் சகீப் அல் ஹசன் இந்த தொடரில் தனது அணி ஆடிய முதல் போட்டியில் பார்வை கோளாறு ஒன்றுக்கு முகம் கொடுத்ததாக குறிப்பிடப்படுகின்றது. சகீப் அல் ஹசன் இந்தியாவில் கடந்த ஆண்டு (2023) நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரிலும் இதே மாதிரியான ஒரு பார்வைக் கோளாறுக்கு முகம் கொடுத்திருந்ததாக முறைப்பாட்டினை முன்வைத்திருந்தார் 

இந்த நிலையில் சகீப் அல் ஹசன் மருத்துவப் பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்திருந்ததோடு அதில் பார்வைக் கோளாறு தொடர்பில் கண்டறியப்பட்டிருப்பதோடு அது அவரது இடது கண்ணை பாதித்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது 

விடயங்கள் இவ்வாறு காணப்பட இந்தப் பார்வைக் கோளாறுக்காக தற்போது சிகிச்சைகளை ஆரம்பித்திருக்கும் அவர் தொடர்ந்தும் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சகீப் அல் ஹசன் பொதுவாக துடுப்பாட்டத்தில் ஈடுபடும் போதே பார்வைக் கோளாறுக்கு முகம் கொடுப்பதால் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது 

இதேநேரம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் சகீப் அல் ஹசனின் நோய் நிலைமை தொடர்பில் மிக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<