பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் அவரினால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும் என அந்த நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமனம்!
பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண நிலைமை காரணமாக நடைபெற்ற கலவரத்தின் போது கொல்லப்பட்ட ருபேல் மொஹம்மட் என்பவரின் தந்தை வழங்கிய முறைப்பாட்டில், பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித்தலைவரான சகீப் அல் ஹசனும் குற்றவாளிகளில் ஒருவராக பெயரிடப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குற்றம் சுமத்தியவர்கள் தரப்பிலான வழக்கறிஞர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு வழங்கிய கடிதம் ஒன்றில் சகீப் அல் ஹசனினை அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக குறிப்பிட்ட கடிதத்தில் சர்வதேச கிரிக்கட் வாரியத்தின் விதிமுறை ஒன்றினையும் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயங்கள் இவ்வாறு காணப்பட்டிருக்க இந்த விடயம் தொடர்பில் விசாரிப்பதாக தெரிவித்திருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) சகீப் அல் ஹசன் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் அவரினால் கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும் எனக் கூறியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவரும் விடயங்களின் அடிப்படையில் சகீப் அல் ஹசன் குற்றவாளி என காவல்துறைக்கு வழங்கப்பட்ட முதல் அறிக்கையிலேயே (FIR) குறிப்பிடப்பட்டுள்ளதோடு அவர் குற்றவாளி நிரூபிக்கப்பட இன்னும் சில படிமுறைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரியான பரூக்கு அஹ்மட் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், சகீப் அல் ஹசன் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் ஒருவர் என்பதனால் அவருக்கு இந்த கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் தேவையான அனைத்து சட்ட உதவிகளினையும் செய்ய தாம் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த ஜப்னா, கோல் அணிகள்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான டெஸ்ட் தொடரில் ஆடி வருவதோடு குறிப்பிட்ட டெஸ்ட் தொடரில் சகீப் அல் ஹசன் ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின் பின்னர் சகீப் அல் ஹசன் தாயகம் திரும்பாமல் இங்கிலாந்துக்குச் சென்று அங்கே சர்ரே (Surrey) அணிக்காக கவுன்டி போட்டிகளில் ஆடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கான அனுமதியினையும் (NOC) அவருக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<