பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல் ஹசன் கிரிக்கெட் போட்டியொன்றில் கோபமாக நடந்துகொண்டமைக்காக தண்டனையினைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பங்களாதேஷின் உள்ளூர் கிரிக்கட் தொடர்களில் ஒன்றான பங்கபந்து டாக்கா பிரீமியர் லீக் தொடரின் போட்டி ஒன்று நேற்று (12) நடைபெற்றிருந்தது.
அமில அபோன்சுவின் இரண்டாம் இன்னிங்ஸ் அமெரிக்காவில்
குறித்த போட்டியில் LBW ஆட்டமிழப்பு ஒன்றுக்காக கள நடுவரிடம் வேண்டுகோள் விடுத்த சகீப் அல் ஹசன் அந்த ஆட்டமிழப்பிற்கு மறுப்பு வழங்கப்பட்டதனை அடுத்து நடுவருடன் கோபமாக நடந்து கொண்டதோடு, ஸ்டம்பினையும் பிடுங்கி எறிந்து அனைவருக்கும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தார். தொடர்ந்து, சகீப் அல் ஹசன் கோபமாக நடந்து கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
சகீப் அல் ஹசன் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சை எழுப்பிய நிலையில், தனது நடத்தைக்காக அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் வாயிலாக மன்னிப்பினை கோரியிருந்தார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் அவதானம் மேற்கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) சகீப் அல் ஹசனின் மோசமான நடத்தைக்கு தண்டனையாக, பங்கபந்து டாக்கா பிரீமியர் லீக் தொடரில் 3 அடுத்த போட்டிகளில் விளையாட தடை விதித்திருப்தோடு, 5800 அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி 1.14 மில்லியன் ரூபா) அபாரதமாகவும் செலுத்த கட்டளை பிறப்பித்திருக்கின்றது.
இந்த தண்டயினை சகீப் அல் ஹசன் எந்த மேன்முறையீடுகளுமின்றி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட மறுத்து ஒரு வருட போட்டித்தடைக்கு உள்ளான சகீப் அல் ஹசன், அடிக்கடி ஒழுக்கம் சார்ந்த விடயங்களில் தவறிழைத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…