இந்த ஆண்டுக்கான (2021) லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடர், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்த தொடரின் வீரர்கள் ஏலத்தில் பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க போராட்டம் வீண்
அதன்படி, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள LPL T20 தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுப்பதற்கு தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்ட வீரர்களில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகீப் அல் ஹசன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர்களான பென் கட்டிங், ஜேம்ஸ் போல்க்னர் தென்னாபிரிக்க ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவர் டெம்பா பெவுமா ஆகிய வீரர்கள் முக்கிய இடத்தினைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வீரர்கள் ஒரு பக்கமிருக்க இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் மிச்செல் மெக்லனகன், மேற்கிந்திய தீவுகளின் நிகோலஸ் பூரான், ரவி ராம்போல் போன்ற முன்னணி வீரர்களும் LPL T20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய வீரர்கள் வரிசையில் வனிந்து ஹஸரங்க முன்னேற்றம்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC), லங்கா பிரீமியர் லீக் இரண்டாவது பருவகாலத்திற்கான தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கின்ற வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பினை கடந்த மாத இறுதிப்பகுதியில் வழங்கியிருந்தது. இதற்கு அமைவாகவே இந்த வீரர்கள் ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் விளையாடுவதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்திருக்கின்றனர்.
LPL தொழிநுட்ப குழுவின் தலைவராக சரித் சேனாநாயக்க நியமனம்
இதேநேரம், LPL T20 தொடரின் முதல் பருவகாலத்தில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வீரர்கள் எவரும் பங்கேற்றவிருக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டுக்கான தொடரில் குறித்த நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கெடுப்பதற்கு தங்களது பெயர்களை வழங்கியிருப்பது LPL T20 தொடர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிகம் பிரபல்யமடைந்திருப்பதற்கு சான்றாக காணப்படுகின்றது.
இதேநேரம், பெயர் பதிவு செய்த வெளிநாட்டு வீரர்களில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான உஸ்மான் கவாஜா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யூசுப் பதான் ஆகியோரும் முக்கிய இடம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வீரர்கள் விபரம்
அவுஸ்திரேலியா – உஸ்மான் கவாஜா, பென் கட்டிங், ஜேம்ஸ் போல்க்னர், பென் டன்க், கெல்லும் பெர்குஸன்
பங்களாதேஷ் – தமிம் இக்பால், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அஹமட், விடன் தாஸ், சௌம்யா சர்க்கார், மஹமதுல்லா, சகீப் அல்-ஹசன்
இந்தியா – இர்பான் பதான், யூசுப் பதான்
- பாகிஸ்தான் – ஹரிஸ் சொஹைல், வக்காஸ் மக்சூத், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் இர்பான், சொஹைப் மக்சூத், சான் மசூத், அன்வர் அலி, அம்மாட் பட்
- ஆப்கானிஸ்தான் – அஸ்கார் ஆப்கான், மொஹமட் சஹ்ஷாத், நஜிபுல்லாஹ் சத்ரான், நவீன் உல் ஹக், உஸ்மான் சின்வாரி, றஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரத்துல்லா சஷாய், கைஸ் அஹ்மட்
- தென்னாபிரிக்க வீரர்கள் – ரிலே ரூஸ்ஸோ, டேவிட் வைஸ், ஜொன் ஜொன் ட்ரவர் ஸ்மட்ஸ், மோர்னே மோர்கல், ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன், கேசவ் மஹராஜ், தப்ரைஸ் சம்ஷி, ஹர்துஸ் விஜியோன்
- மேற்கிந்திய தீவுகள் – செல்டொன் கொட்ரெல், றயாத் எம்ரிட், ரவி ராம்போல், ட்வெய்ன் ஸ்மித், தினேஷ் ராம்டின், ஜோன்சன் சார்ள்ஸ், ரொவ்மன் பவல், நிகோலஸ் பூரான், செர்பானே ரூதர்போர்ட்
- ஜிம்பாப்வே – ப்ரென்டன் டெய்லர்
- நேபாளம் – சந்தீப் லமிச்சானே
- அமெரிக்கா – அலி கான்
- நியூசிலாந்து – மிச்செல் மெக்லனகன்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<