உலகக்கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் சகீப் அல் ஹஸன்

Cricket World Cup 2023

1468

பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல் ஹஸன் உபாதை காரணமாக உலகக்கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணிக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை (06) நடைபெற்ற போட்டியின் போது சகீப் அல் ஹஸனின் இடதுகை ஆள்காட்டி விரலில் உபாதை ஏற்பட்டுள்ளது. 

அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவிற்கு நீதிமன்ற தடை

குறித்த உபாதையை தொடர்ந்து முழு போட்டியிலும் இவர் விளையாடியிருந்தாலும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் அவருடைய விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. 

இதன்காரணமாக எதிர்வரும் 11ம் திகதி பூனேவில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பங்களாதேஷ் அணியின் இறுதி உலகக்கிண்ணப் போட்டியில் சகீப் அல் ஹஸன் விளையாட மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சகீப் அல் ஹஸன் 65 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசியிருந்ததுடன், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இவருடைய பிரகாசிப்புடன் பங்களாதேஷ் அணி தங்களுடைய 2வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

இலங்கை, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஷ் கிண்ணத் தொடருக்கு தகுதிபெறுவதற்கு புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களுக்குள் இடம்பிடிக்க வேண்டும். எனவே அடுத்துவரும் போட்டிகள் மேற்குறித்த அணிகளுக்கு முக்கியமான போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<