பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக மீண்டும் சகீப் அல் ஹசன்

181

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் அந்தஸ்து அற்ற ஒற்றை டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் குழாம் முன்னர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று (30) பங்களாதேஷ் அணியின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் தொடருக்கான குழாமானது 15 பேர் கொண்ட பலம் பொருந்திய குழாமாக பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் பங்களாதேஷ் அணி இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வில் சென்றிருந்த நம்பிக்கை சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். 

ரஷீட் கான் தலைமையில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் பங்களாதேஷூக்கு…

அத்துடன் இறுதியாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடாததால் மஹ்மதுல்லாஹ்வின் கைக்குச்சென்ற அணியின் தலைமைத்துவம் சகீப் அல் ஹசனின் மீள்வருகையை தொடர்ந்து மீண்டும் அவரிடமே சென்றுள்ளது. மேலும் திருமண பந்தத்தில் இணையவுள்ள காரணத்தினால் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தில் ஓய்வில் சென்றிருந்த லிட்டன் டாஸ் திருமணத்தின் பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

பங்களாதேஷ் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான முஸ்தபீஷூர் ரஹ்மான் பயிற்சி முகாமின் போது உபாதைக்குள்ளானதன் காரணமாக எதிர்கால திட்டத்தின் அடிப்படையில் ஒற்றை டெஸ்ட் தொடருக்கான குழாமில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் காலிட் அஹமட் சத்திர சிகிச்சையின் பின்னர் இன்னும் குணமாகாததன் காரணமாக டெஸ்ட் குழாமில் இடம்பெறவில்லை. 

இதேவேளை அண்மையில் நிறைவுக்குவந்த இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் முதல் முறையாக அணிக்கு தலைமை தாங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் விடுமுறைக்கு விண்ணப்பித்திருந்ததன் காரணமாக அவரும் டெஸ்ட் குழாமில் இடம்பெறவில்லை.   

இவ்வாறு வீரர்கள் உபாதையினாலும், ஓய்விலும் சென்றுள்ள நிலையில் 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் டெஸ்ட் அறிமுகம் பெற்று வெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் இறுதியாக 2017 செப்டம்பரில் விளையாடிய நிலையிலுள்ள வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹமட், இவ்வருட பெப்ரவரியில் நியூசிலாந்து தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்தாலும் உபாதை ஏற்பட்டதன் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் டெஸ்ட் விளையாடும் வகையில் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

ஒரே சதத்தில் 4 வீரர்களை பின்தள்ளி இரண்டாமிடம் பிடித்த ஆஸி. வீரர்

T20I கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சதமடித்த வீரர்கள் வரிசையில்…

கடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்ட வீரராகவும், சுழல் பந்துவீச்சாளராகவும் திகழ்ந்த மொஸாதீக் ஹொஸைன் இறுதியாக 2018 ஜனவரியில் இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில் தற்போது ஒன்றரை வருடங்களின் பின்னர் மீண்டும் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

குழாமில் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் ஸத்மன் இஸ்லாம், முஸ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லாஹ் ரியாத், மொஹமட் மித்துன், சௌமியா சர்கார் மற்றும் மொமினுல் ஹக் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் தஸ்கின் அஹமட், இபாதத் ஹொஸைன், அபூ ஜெயித் ராஹி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ஒற்றை டெஸ்ட் தொடரின் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளின் பங்குபற்றுதலுடன் முக்கோண டி20 சர்வதேச தொடரும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாம்

சகீப் அல் ஹசன் (அணித்தலைர்), சௌமியா சர்கார், ஸத்மன் இஸ்லாம், மொமினுல் ஹக், முஸ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், மஹ்மதுல்லாஹ் ரியாத், மொஹமட் மித்துன், மொஸாதீக் ஹொஸைன், மெஹ்தி ஹஸன் மிராஸ், தைஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், அபூ ஜெயித் ராஹி, இபாதத் ஹொஸைன், தஸ்கின் அஹமட் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<