பங்களாதேஷுக்கு எதிராக இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி ஒன்றை பெற்ற சுதந்திரக் கிண்ண இறுதிப் போட்டியில் ஞாயிறு இரவு ஆர். பிரேமதாச மைதானத்தில் நிரம்பி வழிந்த இலங்கை ரசிகர்கள் இந்தியாவுக்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி உணர்வுபூர்வமானதாக இருந்தது.
[rev_slider LOLC]
புலியின் வாயிலிருந்து வெற்றியைப் பறித்த தமிழக நட்சத்திரம் கார்த்திக்!
கடைசி இரண்டு ஓவர்களிலும் தனது துடுப்பாட்டத்தால் சாகசம் நிகழ்த்திய தினேஷ் …
தனது 167 ஓட்டங்களை பாதுகாக்க பங்களாதேஷ் அணியினர் போதுமானவரை போராடினர். முஸ்தபிசுர் ரஹ்மான் 18ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் விட்டுக் கொடுத்ததால் இந்திய அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களிலும் 34 ஓட்டங்கள் பெற வேண்டி ஏற்பட்டது. அப்போது பதற்றம் காட்டாமல் ஆடிய தினேஷ் கார்த்திக் எட்டு பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்று பங்களாதேஷிடம் இருந்து வெற்றியை பறித்தெடுத்தார். கடைசி பந்தில் வெற்றி பெற இந்திய அணிக்கு ஐந்து ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்டபோது ஜாவிட் மியன்டாட் செய்தது போன்று எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸர் ஒன்றை விளாசினார் தினேஷ் கார்த்திக்.
ஆர். பிரேமதாச மைதானத்தில் இருந்தவர்கள் மாத்திரமல்ல, இந்தியா வெற்றிபெற வேண்டும் என்பதே அனைத்து இலங்கையர்களதும் உணர்வாக இருந்தது. பொதுவாக பலவீனம் கொண்ட அணிக்கே மக்கள் அதரவளிப்பார்கள் என்றபோதும், கடந்த வெள்ளியன்று பங்களாதேஷ் வீரர்களின் வெட்கக்கேடான, நாகரிகமற்ற நடத்தையே இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் இந்தியாவை ஆதரிப்பதற்கு காரணமாகும்.
வெள்ளியன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் வாழ்வா சாவா என்ற போட்டி நடைபெறும் வரை இந்த தொடர் சுமுகமாகவே நடந்தது. வெள்ளிக்கிழமை போட்டிக்காக ஷகீப் அல் ஹஸன் கொழும்புக்கு வந்தபோது, பங்களாதேஷ் அணியின் நடத்தை அதிரடியாக மாறக்கூடும் என்று மூத்தவர் ஒருவர் கூறியது உண்மையானது.
மெதிவ்ஸ், சந்திமாலின் சேவையை எதிர்பார்க்கும் இலங்கையின் முன்னாள் வீரர்
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் …
பங்களாதேஷ் அணித்தலைவரின் அருவருப்பான நடத்தையை தொலைக்காட்சி கெமராக்கள் படம்பிடித்தன. இசுரு உதானவின் ஓவரில் இரண்டாவது பௌன்சர் பந்துக்கு நடுவர் நோ போல் அறிவிக்கத் தவறியதை அடுத்து அவர் ஒரு சந்தர்ப்பத்தில் தனது வீரர்களை மைதானத்தில் இருந்து திரும்ப அழைத்தார். கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் மஹ்முதுல்லாஹ் ரியாத் சிக்ஸர் ஒன்றை விளாசி இலங்கைக்கு எதிராக வெற்றியை பெற்ற சில வினாடிகளுக்கு பின் உடைமாற்றும் அறையின் கண்ணாடி கதவு உடைந்திருந்தது.
அந்த கதவை உடைத்தது யார் என்பது CCTV காட்சிகளில் தெளிவாக தெரியவில்லை. எனினும் போட்டி மத்தியஸ்தர் கிறிஸ் பிரோட் அந்த உடைமாற்றும் அறையின் சமையற்காரர்களுடன் உரையாடி யார் அந்த குற்றவாளி என்பதை கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தங்கி இருந்த கொழும்பு, முவென்பிக் ஹோட்டலே போட்டியின்போது உணவு தயாரிக்கும் வேலையை பார்த்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் சமையல்காரர்களில் ஒருவர், ஷகீபே இந்த சேதத்தை ஏற்படுத்தியதாக பிரோட்டிடம் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணித்தலைவர் வேகமாக கதவை தள்ளியதாலேயே அந்த கதவு உடைந்ததென அதனை பார்த்தவர் பிரோட்டிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி போதுமான ஆதரம் இருந்த போதும் கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்டு வரும் பிரோட், பாராமுகமாக இருப்பதற்கு முடிவெடுத்து சின்னதாக ஒரு தண்டனை கொடுக்க தீர்மானித்தார். இதன்படி ஷகீபுக்கு 25 வீத அபராதமும் ஒரு தண்டப் புள்ளியுமே வழங்கப்பட்டது.
இலங்கை அணி ரசிகருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ரோஹித் சர்மா
சுதந்திரக் கிண்ண முக்கோண T20 தொடரில் இந்திய அணியின் தலைவராக …
கடந்த சில ஆண்டுகளாக பங்களாதேஷ் அணி தனது திறமையை வளர்த்துக் கொண்டிருப்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். ஷகீப், முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பால் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் அகிய ஒருசில உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் அவர்களிடம் உள்ளனர். லிடோன் தாஸ், மெஹதி ஹசன் மற்றும் மொமினுல் ஹக் போன்ற இளம் வீரர்கள் நம்பிக்கையை கொண்டுவந்துள்ளனர்.
பெரும் போராட்டங்கள் கொண்ட ஆரம்ப ஆண்டுகளுக்கு பின்னர் குறிப்பிடும்படியான பலம்கொண்ட அணியாக பங்களாதேஷ் எழுச்சி பெற்றிருப்பதை பாராட்ட வேண்டும். எவ்வாறாயினும், ஷகீப் போன்றவர்களின் நடத்தை அவர்களுக்கு சாதகமாக இருக்காது.
வெள்ளிக்கிழமையன்று ஒரு சில இலங்கையர்களும் தமது பெருமையை பாதுகாக்கவில்லை. தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் போன்றவர்கள் குற்றம் சாட்டப்படாதபோதும் தாம் தனது நாட்டின் பிரதிநிதிகள் என்பதை அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியமாகும்.
தினேஷ் கார்த்திக்கை பார்த்து அவர்கள் சில விடயங்களை கற்றுக் கொள்ளலாம். அவர் தனி ஒருவராக இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததோடு அதனை அவர் அழகான முறையில் வெளிப்படுத்தினார். இந்திய அணியின் பதில் தலைவர் ரோஹித் ஷர்மா வெற்றிக்குப் பின்னர் தமக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் தனது அணியை மைதானத்தை சுற்றி அழைத்துச் செல்ல தீர்மானித்தது ஒரு சிறந்த பண்பை காட்டியது.