பாகிஸ்தான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அப்ரிடி

187

கொரோனா வைரஸ் எதிரொலியாக பாகிஸ்தானில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக அந்த நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சஹீட் அப்ரிடி அங்குள்ள மக்களுக்கு உதவி செய்து வருகின்றார்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியுள்ளது

இது போன்றே பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானிலும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே பணிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. அதனால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான சஹீட் அப்ரிடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை தனது சஹீட் அப்ரிடி அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார்

இது பாகிஸ்தானில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியவசிய உணவுப் பொருட்கள், சானிட்டைசர் என பல பொருட்கள் பாகிஸ்தானின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட, ஏழை மக்களுக்குக் அப்ரிடியின் அறக்கட்டளை ஊடாக வழங்கப்பட்டு வருகிறது

இதுதொடர்பில் சஹீட் அப்ரிடி அந்நாட்டின் ஸ்போர்ட் ஸ்டார் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த நேரத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டியது நமது கடமை. அதேபோல, எனது நாட்டிற்கு திருப்பிச் செலுத்த இதுவே சிறந்த நேரம்.  

இந்த நாடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. எனவே, நெருக்கடி காலங்களில் மக்களுக்கு உதவுவது எனது கடமையாகும். யாரும் உதவியற்றவர்களாக இருப்பதை உறுதிசெய்ய எங்களால் முடிந்தவரை உதவ நாங்கள் உறுதி செய்கிறோம்” என்று அப்ரிடி கூறினார்

நாளாந்தம் உழைப்பவர்களுக்கு உதவ முன்வந்திருக்கும் மஹாநாம, வாஸ் ஜோடி

“அவசரகாலத்தில் உடனடியாக மக்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை தொடங்க வேண்டியிருந்தது. மேலும் விடயங்களை வரிசைப்படுத்த வேண்டியிருந்தது. நாங்கள் அதை மிக வேகமாக செய்ய வேண்டியிருந்தது.   

ஏனெனில் வேலையின்மை, வறுமை உள்ள ஒரு நாட்டில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்று அவர் நினைவு கூர்ந்தார்

இதேநேரம், தேவைப்படுபவர்களுக்கு உதவ மனிதகுலத்திற்காக வெளியே வருமாறு அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ள அப்ரிடி, நல்ல விடயத்துக்காக எதையும் பங்களிக்கக்கூடிய அனைவருக்கும் இது ஒரு தாழ்மையான கோரிக்கையாக அவர் முன்வைத்தார்

இந்த நிலையில், அப்ரிடியின் மனிதாபிமான செயல்பாடு குறித்து பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் வாழ்த்தும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்

டி20 உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறும் மொஹமட் ஹபீஸ்

இதுஇவ்வாறிருக்க, அப்ரிடி ஏழை மக்களுக்கு உதவும் புகைப்படங்களை தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.  

இதைப் பகிர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்மனிதநேயம் கொண்ட பெரிய உதவி. கடவுள் நம்மை ஆசிர்வதிக்கட்டும். உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கட்டும். உலகின் நன்மைக்காக பிரார்த்திப்போம்என குறிப்பிட்டுள்ளார்

அந்த பதிவிற்கு அப்ரிடி நன்றி கூறி உள்ளார். அதில், ‘பாஜி உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உலகம் ஒன்றுபட வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டியது நமது கடமைஎன குறிப்பிட்டுள்ளார். ஏழைகள் துயர் குறைய வேண்டும் என்றால் கொரோனா வைரஸ் தாக்கம் விரைவில் குறைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.  

யுவ்ராஜ் சிங்கின் பதிவில், இது சோதனைக் காலம். இந்த நேரத்தில்தான் பாதிக்கப்பட்டோருக்கு, குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு நாம் உதவ வேண்டும். அந்த வகையில் சஹீட் அப்ரிடியை நான் பாராட்டுகிறேன்

அவருக்கு அனைவரும் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கோரிக்கை விடுத்திருந்தார்

கொரோனாவுக்காக மொட்டை அடித்த டேவிட் வோர்னர்

ஆனாலும், சஹீட் அப்ரிடியை பாராட்டிய ஹர்பஜன் சிங் மற்றும் யுவ்ராஜ் சிங்கை இந்திய இரசிகர்கள் விமர்சித்து டுவிட்டரில் மோசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொவிட்-19 நிதியத்துக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை 5 மில்லியன் ரூபா நிதியுதவி அளித்துள்ளது

இதுஇவ்வாறிருக்க, கொவிட்-19 நிதியத்துக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தங்களது உதவிகளை அளித்து வருகின்றனர்

இதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் அசார் அலி, இமாத் வசீம் மற்றும் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் ஆகியோர் தலா ஒரு மில்லியன் ரூபா நிதியை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<