பிடியெடுப்புக்களை கோட்டைவிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

212
AFP

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (26) ஆரம்பமாகியிருந்த நிலையில், போட்டியின் முதல் நாளில் பாகிஸ்தான் வீரர்கள் பல களத்தடுப்புத் தவறுகளை மேற்கொண்டிருந்தனர். 

சந்திமால் – தனன்ஞய இணைப்பாட்டத்தில் வலுப்பெற்ற இலங்கை

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தற்காலிக தலைவர் மொஹமட் ரிஸ்வான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நியூசிலாந்து வீரர்களுக்கு வழங்கியிருந்தார். போட்டியின் நிலைமைகளை கருத்திற்கொண்ட போது மொஹமட் ரிஸ்வானின் முடிவு சரியாகவே அமைந்திருந்தது. 

இதனை அடுத்து தொடக்கத்திலும் பாகிஸ்தான் அணி தமது பந்துவீச்சாளர்கள் மூலம் சிறந்த ஆட்டத்தினையே வெளிப்படுத்தியது. அதன்படி, பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளரான சஹீன் அப்ரிடி நியூசிலாந்து அணியின் முன்வரிசை வீரர்களான டொம் லேதம் மற்றும் டொம் ப்ளன்டல் ஆகியோரின் விக்கெட்டுக்களை  கைப்பற்றினார்.  

எனினும், இதனை அடுத்து கேன் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோரின் உறுதியான இணைப்பாட்டம் காரணமாக போட்டியின் முதல்நாள் நிறைவுக்கு வரும் போது சஹீன் அப்ரிடி இன்னும் ஒரு விக்கெட்டினை மாத்திரமே மேலதிகமாக கைப்பற்றினார். இதற்கு பாகிஸ்தான் வீரர்களின் மோசமான களத்தடுப்பு காரணமாக இருந்தது. 

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சஹீன் அப்ரிடி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

”நாங்கள் புதிய பந்து மூலம் விக்கெட்டுக்களை கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டோம். அதன் மூலம் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தோம். ஆனால், பிடியெடுப்புக்களை எடுக்க முடியாது போயின் அது உங்களுக்கு கடினம்.” 

நியூசிலாந்து அணிக்கு முதல்நாளில் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கிய ரொஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பிடியெடுப்புக்களை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மிக்கி ஆத்தர் எம்முடன் இருப்பது அதிஷ்டம் – திமுத் கருணாரத்ன

அதோடு, தேவையான சந்தர்ப்பங்களில் LBW ஆட்டமிழப்பிற்கான நடுவர் மேன்முறையீடுகளையும் பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டிருந்தனர்.  

இதனால், போட்டியின் முதல்நாள் ஆதிக்கம் பாகிஸ்தான் அணியின் பக்கம் இருந்து விடுபட்டிருந்ததோடு பாகிஸ்தான் அணியினால் முதல்நாளில் பிடியெடுப்பு தவறவிடப்பட்டிருந்த கேன் வில்லியம்சன் போட்டியின் இரண்டாம் நாளில் சதம் (129) விளாசி, நியூசிலாந்து கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸில் 430 ஓட்டங்களைப் பெற உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<