ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் வீரருக்கு போட்டித்தடை

299

ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான  சபீர் அஹமட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட நான்கு வருட போட்டித்தடையினை வழங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றது இந்தியா

அதன்படி சபீர் அஹமட்டிற்கு வழங்கப்பட்டிருக்கும் போட்டித்தடை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த 2019ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணி  நேபாள, ஜிம்பாப்வே அணிகளுடன் விளையாடிய கிரிக்கெட் தொடர்களின் போது சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகிய விடயம் தொடர்பில் ICC மேற்கொண்ட விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததன் காரணமாகவே சபீர் அஹமட் போட்டித்தடையினை பெற்றிருக்கின்றார்.

இதேநேரம் சபீர் அஹமட், ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு விதிமுறைகளை ஆறு பிரிவுகளில் மீறியதற்கு குற்றவாளியாகவும் இனங்காணப்பட்டிருக்கின்றார். 

சபீர் அஹ்மட் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்த சபீர் அஹ்மட் இதுவரை அவ்வணிக்காக 40 கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<