இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்

348

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஏழு பேர் இங்கிலாந்தின் உள்ளூர் (கவுண்டி) கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிண்ண தொடருடன் .சி.சியின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகவுள்ளது.  

அதேபோன்று, உலகக் கிண்ணம் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணியும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜூலை மாத இறுதியில் இந்த தொடர் தொடங்குகிறது.   

இதையொட்டி உலகக் கிண்ண அணியில் இடம்பெறாத இந்திய முன்னணி வீரர்களை தயார்படுத்த அவர்களை இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விடுவதற்கு இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

இதன்படி செடிஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் கவுண்டி போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இவர்களில் புஜாரா ஏற்கனவே யோர்க்ஷெயார் கவுண்டி அணிக்காக 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், அவர் இந்த வருடமும் அந்த அணிக்காக விளையாடவுள்ளார்.

2015 உலகக் கிண்ண ஞாபகத்தை மீட்டெடுக்கும் சங்காவின் துடுப்பாட்ட சாதனை

குமார் சங்கக்கார, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறுக்கப்படாததும், மறக்கப்படாததுமான ஒரு பெயர். பெயர…

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”உலகக் கிண்ணத் தொடர் முடிவடைந்த இருவார காலங்களில் இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கு தயாராகும் முகமாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்திய டெஸ்ட் அணியைச் சேர்ந்த ஒருசில வீரர்களை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி கடந்த வருடம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது லீசெஸ்டர்ஷெயர், எசெக்ஸ், நொட்டிங்ஹம்ஷெயர் உள்ளிட்ட கவுண்டி கழகங்களைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியிருந்தது. இதன்படி, இவ்வருடம் இங்கிலாந்தில் கோடை காலங்களில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், இந்திய டெஸ்ட் அணியின் உதவித் தலைவர் ரஹானே அனேகமாக ஹேம்ப்ஷையார் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் சபை நிர்வாக குழுவின் ஒப்புதலுக்காக அவர் காத்திருக்கிறார். இதன்படி, எசெக்ஸ், லீஸ்டெஸ்ஷெயார், நொட்டிங்ஹம்ஷையார் ஆகிய கவுண்டி அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் உலகக் கிண்ண குழாமில் அமீருக்கு இடமில்லை

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாத்தில் முன்னணி வேகப்பந்து…

முன்னதாக கடந்த வருடம் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி சர்ரே அணியுடன் விளையாடுவதற்கு தயாராக இருந்த போதிலும், இறுதித் நேரத்தில் ஏற்பட்ட உபாதையினால் அவர் விலகிக் கொண்டார்.

அதேபோல, இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரும், நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வினும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்தடவையாக கவுண்டி போட்டிகளில் வொர்ஸ்டெர்ஷையார் அணிக்காக விளையாடி இருந்தார். க்ளெஸ்டெர்ஷையார் அணியுடனான முதல் போட்டியிலேயே அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்திய அணியின் மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளரான அக்ஷார் பட்டேல், கடந்த வருடம் டர்ஹம் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடியிருந்தார்.

இதனிடையே, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான இஷாந்த் சர்மா, சசெக்ஸ் அணிக்காகவும், வருண் அரோன் லீஸ்டெஸ்ஷெயார் அணிக்காகவும் கடந்த வருடம் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<