ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் அரையிறுதியில் சாதிக்கப் போவது யார்?

310

விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் இடம்பெற்று வரும் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் டிசம்பர் 14 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) சுகததாச அரங்கில் நடைபெறவுள்ளன.

குறித்த தினம் மாலை 3.00 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, கொழும்பு புனித ஜோசப் கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளதோடு, மாலை 5.30க்கும் நடைபெறும் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.   

மகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில்

யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி அணிக்கு எதிரான போட்டியை 2-0….

முதல் அரையிறுதி

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

அணித்தலைவர் தரிந்து டி சில்வாவின் அபார ஆட்டத்தின் உதவியோடு யாழ்ப்பணத்தின் மற்றொரு முன்னணி பாடசாலை அணியான, மகாஜனா கல்லூரியுடம் சிறந்த திறமையை வெளிக்காட்ட நீர்கொழும்பு இளம் வீரர்களால் முடிந்தது. இந்த தொடரில் தற்போது அதிக கோல்கள் பெற்ற அணியாக உள்ள மாரிஸ் ஸ்டெல்லா தனது அணித் தலைவருக்கு மற்றொரு சிறப்பான தினத்தை எதிர்பார்த்துள்ளது. அந்த அணியின் அவதானிக்கப்பட வேண்டிய ஏனைய முக்கிய வீரர்களான ரஜிந்து பெர்னாண்டோ மற்றும் பிரனீத் சமிந்த ஆகியோர் முக்கியமானவர்களாக உள்ளனர்.

புனித ஜோசப் கல்லூரி தனது சம்பிரதாய போட்டியாளரான புனித பேதுரு கல்லூரியை காலிறுதியில் வீழ்த்தியே இந்த சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. நீண்ட கால உபாதை ஒன்றுக்கு முகம்கொடுத்திருப்பதால் அசேல மதுசானின் சேவையை பெற முடியாத நிலையிலும் புனித ஜோசப் கல்லூரி வலுவான அணி ஒன்றாகவே உள்ளது.

கடைசி நிமிட கோல் மூலம் அரையிறுதிக்கு நுழைந்த புனித ஜோசப் கல்லூரி

ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய புனித ஜோசப்…

முன்களத்தில் ஷெனால் சன்தேஷ் மற்றும் சலன பிரமன்த அச்சுறுத்தலாக இருப்பதோடு மத்திய களம் நிமேஷ் குரேவின் கட்டுப்பாட்டில் உள்ளது. காலிறுதியில் மோசமான காயம் ஒன்றுக்கு முகம்கொடுத்த அணித்தலைவர் மார்ஷல் கொடிக்கார அரையிறுதியில் முதல் பதினொருவரில் இடம்பிடிப்பது சந்தேகமாக உள்ளது.    

2ஆவது அரையிறுதி

ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி எதிர் புனித பத்திரிசியார் கல்லூரி

காலிறுதியில் பலம்கொண்ட கம்பளை ஸாஹிரா கல்லூரியை தோற்கடித்து ஒரு வலுவான அணியாக ஹமீட் அல் ஹுஸைனி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கொழும்பு வீரர்கள் 2-1 என வெற்றிபெற்ற போதிலும் அந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இருந்தது ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களே.

த்ரில் ஆட்டத்தில் கம்பளை ஸாஹிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது ஹமீட் அல் ஹுஸைனி

ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி வீரர்கள் ThePapare கால்பந்து….

மொஹமட் அப்கர் மற்றும் சஹனுடன் மத்திய களத்தில் கச்சிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணித்தலைவர் மொஹமட் அமான் அவதானிக்கப்பட வேண்டிய வீரர்களாக உள்ளனர். என்றாலும் அவர்கள் எதிர்பார்க்கப்பட்ட அரையிறுதிப் போட்டியாக இது இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு யாழப்பாணத்தில் இருந்து சவால் வரப்போகிறது.   

கொழும்பு ஸாஹிராவுக்கு எதிராக முதல் பாதியில் 3-0 என்று முன்னிலை பெற்றிருந்த புனித பத்திரிசியார் வீரர்கள் இரண்டாம் பாதியிலும் போராட்டமாக ஆடி, பெனால்டி மூலம் வெற்றி பெற்று இந்த பருவத்தில் சந்தேகமின்றி அதிர்ச்சி அளிக்கும் அணியாக மாறியுள்ளது.

அரங்கே அதிர்ந்த ஆட்டத்தில் ஸாஹிராவை பெனால்டியில் வென்றது புனித பத்திரிசியார்

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித….

முன்களம் மற்றும் மத்திய களத்தில் அனுபவம் கொண்ட வீரர்களுடன் உடற்தகுதி மற்றும் வேகம்கொண்ட அணியாக யாழ் தரப்பு உள்ளது. ஹமில்டன் ஹெயின்ஸ் மற்றும் ரஜிகுமார் சான்தன் ஆகியோரை முன்னிலையாகக் கொண்ட யாழ். வீரர்கள் மீண்டும் ஒருமுறை வரலாறு படைக்க எதிர்பார்த்துள்ளனர். ரமேஷ் டிலக்ஷன் தலைமையிலான புனித பத்திரிசியார் அணி தமது திறமையை வெளிப்படுத்தி, தேசிய மட்டத்தில் சிறப்பிக்க போராடும் என்று எதிர்பார்க்கலாம்.  

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெறும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 3ஆம் மற்றும் 4ஆவது இடங்களை தீர்மானிக்கும் போட்டி டிசம்பர் 16ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருப்பதோடு, தொடர்ந்து அன்றைய தினம் மாலை. 5.45க்கு சம்பியனைத் தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி நடைபெறும்.  

>>கால்பந்து புகைப்படங்களைப் பார்வையிட<<