சுதந்திர கிண்ண அரையிறுதிப் போட்டிகள் விபரம் வெளியீடு

903

2022ஆம் ஆண்டுக்கான சுதந்திர கிண்ண மாகாண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கான, போட்டி அட்டவணை இலங்கை கால்பந்து சம்மேளனம் மூலம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

>>சுதந்திர கிண்ண அரையிறுதியில் தென் மாகாணம்

ஏழு வாரங்கள் நடைபெற்றிருந்த இந்த மாகாண கால்பந்து தொடரில், திறமைகளை வெளிப்படுத்தியிருந்த சபரகமுவ, வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாண அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியிருக்கின்றன.

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள தொடரின் அரையிறுதிப் போட்டிகளில், சபரகமுவ அணி தென் மாகாண அணியினையும், கிழக்கு மாகாண அணி, வட மாகாண அணியினையும் எதிர்கொள்ளவிருக்கின்றது.

இதேநேரம் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் காலி, யாழ்ப்பாணம், இரத்னபுரி மற்றும் அம்பாறை ஆகிய நான்கு இடங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அரையிறுதிப் போட்டிகளினை அடுத்து, சுதந்திர கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 05ஆம் திகதி இடம்பெறவிருப்பதோடு, இறுதிப் போட்டி நடைபெறுகின்ற இடம் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

முதல் கட்ட அரையிறுதி

பெப்ரவரி 25 – தென் மாகாணம் எதிர் சபரகமுவ மாகாணம் – காலி பொது மைதானம் – மாலை 3.30 மணி.

பெப்ரவரி 26 – கிழக்கு மாகாணம் எதிர் வட மாகாணம் – துரையப்பா அரங்கு – மாலை 3.30 மணி.

இரண்டாம் கட்ட அரையிறுதி

மார்ச் 1 – கிழக்கு மாகாணம் எதிர் வட மாகாணம் – தென் கிழக்கு பல்கலைக்கழக மைதானம், அம்பாறை – மாலை 3.30 மணி

மார்ச் 2 – சபரகமுவ மாகாணம் எதிர் தென் மாகாணம், சீவாளி மைதானம், இரத்தினபுரி – மாலை 3.30 மணி

>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<