இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணிக்கான வீரர்கள் தெரிவு இம்மாதம் 24ஆம் திகதி காலி, தடெல்ல உள்ளக கரப்பந்தாட்ட அரங்கில் இடம்பெறும் என்று இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் (SLVF) அறிவித்துள்ளது.
நான்காவது ஆசிய ஆடவர் கரப்பந்தாட்ட சவால் கிண்ண போட்டித்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சைனிஸ் தாய்ப்பே தலைநகர் தாய்ப்பேயில் இடம்பெறவுள்ளது. குறித்த தொடரில் இலங்கை அணியும் பங்கேற்கவுள்ளது.
- தமிழ்நாடு இளையோர் கரப்பந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
- DSI சுபர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் ஆரம்பம்!
- ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப்; இலங்கை இறுதி குழாம் அறிவிப்பு
எனவே, இந்த தொடருக்கான இலங்கை தேசிய அணியை தயார்படுத்தும் நோக்குடனே அதன் ஆரம்ப கட்டமாக இந்த வீரர்கள் தெரிவு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனவே, தேசிய அணியில் இணைய விரும்பும் வீரர்கள் இம்மாதம் 24ஆம் திகதி காலி, தடெல்ல உள்ளக கரப்பந்தாட்ட அரங்கிற்கு காலை 8 மணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவுகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்றும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தெரிவுகள் குறித்த மேலதிக விபரங்களைத் தெரிந்து கொள்வதற்கு 0112 669 344 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எற்கனவே, கடந்த 2018ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற முதலாவது ஆசிய ஆடவர் கரப்பந்தாட்ட சவால் கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<