மேமன் சமூக அணிகள் போட்டியிடும் மேமன் புட்சால் போட்டித்தொடர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும், டார்லி வீதியில் அமைந்துள்ள Futsal World உள்ளக அரங்கில் ஜனவரி 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.
இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் அணிகளை பிரிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை எக்ஸ்போ லங்கா நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது துரதிஷ்டவசமாக நடப்புச் சம்பியனான புட்சால் அமிகோஸ் மற்றும் கடந்த ஆண்டில் இரண்டாம் இடத்தை பிடித்த 8 கொன்டைனர்ஸ் அணிகள் ஒரே குழுவில் இடம்பிடித்தன.
பயிற்றுவிப்பாளர் ரூமியின் அதிரடி முடிவு
கொழும்பு ஸாஹிரா கல்லூரி கால்பந்து அணியின்..
இந்த இரண்டு அணிகளுடன் கட்ரா எப்.சி., CKR எப்.சி., மற்றும் யுனைடெட் கிக்கர்ஸ் ஆகிய அணிகள் A குழுவில் இடம்பெற்றுள்ளன.
ஜொலி போய்ஸ், பிளமின்கோ எப்.சி., எம். போய்ஸ், ரெனெகேட்ஸ் மற்றும் கன்னர்ஸ் எப்.சி. ஆகிய அணிகள் B குழுவில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
லீக் அடிப்படையில் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு லீக் போட்டிகள் முடிவில் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் கிண்ணத்திற்கான அரையிறுதியில் எதிர்கொள்ளவுள்ளன. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளேட் கேடயத்திற்கு பலப்பரீட்சை நடத்தும்.
கிண்ணத்திற்கான சம்பியன்ஸ் அணிக்கு ரூபாய் 50,000 பணப்பரிசுடன் வெற்றிக் கிண்ணமும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 30,000 உடன் கிண்ணமும் வழங்கப்படும்.
பிளேட் கேடயத்திற்கான பிரிவில் சம்பியன் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூபாய் 25,000 மற்றும் ரூபாய் 15,000 பணப்பரிசு மற்றும் கிண்ணமும் வழங்கப்படும். சிறந்த ஜெர்சி (Jersey) உடைய அணிக்கு 10,000 பெறுமதியான பணப்பரிசு வழங்கப்படும்.
சிறந்த வீரர் மற்றும் சிறந்த கோல்காப்பாளர்களுக்கு சிறப்பு கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளன. இதன்போது மேமன் சமூக கனிஷ்ட போட்டித் தொடர் ஒன்றும் நடைபெறவிருப்பதோடு அதில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன.
கில்லர் க்ளீட்ஸ், மேமன் நைட் ரைடர்ஸ், செவன் பட்டிஸ் மற்றும் யுனைடெட் செவன்ஸ் ஆகிய அணிகள் ரவுன்ட் ரொபின் (Round robin) அடிப்படையில் மோதவுள்ளன. முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் ஆடும்.
ரட்னம், ரெட் ஸ்டார், திஹாரிய அணிகள் சுபர் சிக்ஸ் முதல் வாரத்தில் வெற்றி
இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால்…
இலங்கையின் சிறிய சமூகமான மேமன் சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் வகையில் இந்த போட்டித் தொடரை ஏற்பாடு செய்ததற்காக மொஹமட் ஷிபானுக்கு இந்த நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு கால்பந்து கழகத்தின் நிறுவனரும், தலைவரும், இலங்கையில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பவருமான சயிப் யூசுப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “எமது சமூகம் ஒரு சிறிய சமூகம் என்றாலும் மிகச் சிறந்த இலங்கையர்களாக உள்ளோம். மேமன்களின் பூர்வீகம், மொழி, எமது கலாசாரம், வரலாறு, மதம் மற்றும் எங்கிருந்து வந்தோம் என்பவை எமது அடையாளங்களாக உள்ளன. ஒரு சிறிய சமூகத்தினரான நாம் சிறப்பான பத்து அணிகளை பெற்றிருக்கிறோம். ஒரே சமூகத்தைச் சேர்ந்த பத்து அணிகள் புட்சால் போட்டியில் ஆடுவதை இட்டு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. எதிர்காலத்திலும் இதற்கான ஆதரவை வழங்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.